நடிகை சாரா அலிகானுடன் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்: என்னாச்சு, ஏதாச்சு?

விளையாட்டு

சமீபத்தில் பாலிவுட் நடிகை சாரா அலி கான், இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுடன் ஓட்டலில் இரவு உணவு சாப்பிட்டதை வீடியோ எடுத்து டிக்டாக் பயனர் வெளியிட்ட நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் துபாயில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் சாரா அலிகானை ஒரு ரசிகர் பார்த்துள்ளார்.

அதனை வீடியோவாக எடுத்து சமூகவலைதளமான டிக்டாக்கில் பகிர்ந்துள்ளார். அதில் இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுடன்,

பாலிவுட் நடிகையும், இந்தாண்டு வெளியான அட்ராங்கி ரே திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவருமான சாரா அலிகானுடன் உணவருந்தும் காட்சி பதிவாகி உள்ளது.

சாரா இளஞ்சிவப்பு நிற உடையிலும், சுப்மன் கில் வெள்ளை மற்றும் பச்சை நிற சட்டை உடையையும் அணிந்திருந்தனர்.

கிரிக்கெட் உலக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கருடன், சுப்மன் டேட்டிங் செய்வதாக வதந்திகள் கடந்த சில வருடங்களாக பரவி வருகின்றன. எனினும் இருவரும் அதுகுறித்து இதுவரை வாய் திறக்கவில்லை.

இந்நிலையில் சாரா அலிகானுடன் சேர்ந்து உணவருந்தும் வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ்களை பதிவிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒருவர் சாரா என்ற பெயர் கேட்டாலே போதும் என்று…

நடிகை சாரா அலிகான் இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடியின் பேத்தி மற்றும் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் மகள் ஆவார்.

அவர் 2017ல் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த கேதார்நாத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

மேலும் இந்தாண்டு ஒடிடியில் வெளியான கலாட்டா கல்யாணம் (அட்ராங்கி ரே) திரைப்படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக நடித்து தமிழிலும் அறிமுகமானார்.

sara ali khan dating

ஒரு கிரிக்கெட் வீரரின் மகள் (சாரா டெண்டுல்கர்) முதல் கிரிக்கெட் வீரரின் பேத்தி (சாரா அலி கான்) வரை என மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் இந்திய அணி மேற்கொண்ட மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிரான தொடர்களில் சிறப்பாக விளையாடினார் சுப்மன் கில்.

இரண்டு தொடர்களிலும் மேன் ஆப்தி சீரிஸ் விருதினை வென்றார். சமீபகாலமாக இந்திய அணியின் இளம் வீரர்கள் மற்றும் பாலிவுட் நடிகைகள் உறவு தொடர்பாக கிசுகிசுக்கள் எழுந்துவருவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில் சுப்மன் கில், நடிகை சாரா அலிகானுடன் ஒன்றாக உணவருந்திய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

தனுஷுடன் நெருக்கம் காட்டும் சாரா- தோழியா, காதலியா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *