டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா பாகிஸ்தானின் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2023 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். சோயப்புக்கு சானியா மிர்ஸா இரண்டாவது மனைவிதான். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உண்டு.
விவகாரத்துக்கு பிறகு சானியா மகனுடன் ஹைதராபாத்தில் தனியாக வசிக்கிறார். அதே வேளையில், சோயப் மாலிக் ஏற்கனவே பாகிஸ்தானை சேர்ந்த சனா ஜாவித் என்ற நடிகையை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். சானியா அமைதியாக வாழ்ந்து வந்தார்.
அதே வேளையில், சானியா மிர்ஸா இரண்டாம் திருமணம் செய்யப்போவதாக தொடர்ந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. தற்போது சானியா மிர்ஸா ஒரு பிரபல தெலுங்கு நடிகர் உடன் டேட்டிங் செல்வதாகவும், அவர்கள் திருமணம் செய்யப்போவதாகவும் மீடியாக்களில் செய்தி வருகிறது. அந்த நடிகர் யார் ? என்ற தகவல் இல்லை.
சமீபத்தில் பாகிஸ்தான் நடிகர் நவீன் சஃபார், சானியா மிர்ஸா மறுமணம் செய்து கொள்ள வேண்டும். விவாகரத்தோடு வாழ்க்கை முடிந்துவிடக் கூடாது. மீண்டும் அவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவ வேண்டுமென்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கிரிக்கெட் வீரர் முகமது ஷமியுடன் சானியா டேட்டிங் சென்றதாக தகவல் பரவி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ‘
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்