ஓய்வு முடிவை மாற்றிய சானியா மிர்சா

விளையாட்டு

இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்சா, இந்த ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2022-க்கு பின்னர் தொழில்முறை டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற எண்ணியிருந்த நிலையில் தனது ஓய்வு குறித்த முடிவை மாற்றியுள்ளார்.

sania mirza boycott

அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டி, ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரை அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

இந்திய டென்னிஸ் வீராங்கனையும், டென்னிஸ் கலப்பு இரட்டையர் தொடரில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ், அமெரிக்க ஓபன் டென்னிஸ் கோப்பைகளை வென்ற சானியா மிர்சா விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து காயம் காரணமாக தான் விலகுவதாக சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

sania mirza boycott

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டு வாரத்திற்கு முன்பு கனடாவில் நடைபெற்ற  டென்னிஸ் போட்டியில் விளையாடியபோது, முன்கை மற்றும் முழங்கை பகுதியில் காயம் ஏற்பட்டது.

ஸ்கேன் ரிப்போர்ட்கள் வரும் வரை இதனை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் தற்போது தசைநாரில் ஏற்பட்ட காயம் காரணமாக, சில வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் என்னை அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் என்னால் விளையாட முடியாது. ஓய்வு குறித்து அறிப்பதற்கு இது சிறந்த நேரமல்ல.

ஓய்வு குறித்த அறிவிப்பை நிச்சயம் நான் உங்களிடம் தெரியப்படுத்துவேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

செல்வம்

ஓய்வை அறிவித்த செரினா வில்லியம்ஸ்: காரணம் என்ன?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.