உலக நாடுகளே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நிகழ்ச்சி தற்போது (ஜூலை 28) நடைபெற்று வருகிறது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் தொடக்க விழாவில் இசை நிகழ்ச்சிகள் ஒரு புறம் நடக்க, பல்வேறு மணல் ஓவியங்களை வரைந்து பார்வையாளர்களைக் கவர்ந்தார் ஓவியர் சர்வம் படேல்.
சர்வம் படேலின் இந்த ஓவியங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் அளவில் பகிரப்பட்டு வருகிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் குதிரையை ஓவியமாக வரைந்தார் சர்வம் படேல்.

இதனை தொடர்ந்து, மூவர்ண கொடியையும், சமாதான புறாவையும் வரைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

அடுத்தடுத்து அசத்தலான ஓவியங்களை வரைந்த அவர், தமிழகத்தையும், விவசாயத்தையும் பெருமைபடுத்தும் வகையில் விவசாயி ஏரோட்டுவதையும் வரைந்த அவருக்கு அங்கிருந்தவர்கள் தொடர் உற்சாகம் கொடுத்தனர்.

இறுதியாக, ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் முக ஸ்டாலின் ஓவியங்களை மூவர்ண கொடி நிறத்தில் வரைந்து நிகழ்ச்சியை முடித்தார்.

சர்வம் படேல் தற்போது இந்தியாவின் மிக முக்கியமான மணல் ஓவியராக இருந்து வருகிறார். இவரின் ஓவியங்கள் மக்களின் பண்பாட்டையும் சமூக அரசியலை வெளிப்படுத்தும் வண்ணம் இருக்கும்.
தற்போது இவரின் அகாடமியில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
- க.சீனிவாசன்