ஒரே ஓவரில் 39 ரன்கள்… யுவராஜ் சாதனையை முறியடித்த வீரர் யார்?

Published On:

| By Kumaresan M

சர்வதேச டி 20 போட்டியில் ஒரே ஓவரில் 39 ரன்களை அடித்து இளம் வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

உலகக் கோப்பை டி20  ஈஸ்ட் ஏசியா – பசிபிக் தகுதிச் சுற்றில் வனாட்டு அணிக்கு எதிராக சமோவா அணி ஆடியது. முதலில் பேட்டிங் செய்த சமோவா அணி 20 ஓவர்களில் 174 ரன்கள் குவித்தது. அந்த அணியின் டேரியஸ் விசர் என்ற வீரர் மட்டுமே 132 ரன்கள் சேர்த்தார். அணியில் 8 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்து இருந்தனர்.

தனது அணியை தனியாக காப்பாற்றிய டேரியஸ் விசர் அதிரடியாக ஆடி 62 பந்துகளில் 132 ரன்களை குவித்தார். பந்துகளை மைதானத்தின் நாலா பக்கமும் சிதறடித்தார். டேரியசின் 132 ரன்களில் 5  பவுண்டரிகள் மற்றும் 14 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்தப் போட்டியில் வனாட்டு வீரர் நாலின் நிபிகோ வீசிய 15 வது ஓவரில் டேரியஸ் விசர் ஆவேசமான ஆட்டம் ஆடினார்.  இந்த ஓவரில் மட்டும்  ஆறு சிக்ஸர்களை  அடித்தார்.  போதாகுறைக்கும் இந்த  ஓவரில் மூன்று நோ பால்களும் வீசப்பட்டன. ஆக, இந்த  ஓவரில் மட்டும் மொத்தம் 39 ரன்கள் கிடைத்தது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 39 ரன்கள் எடுத்து புதிய சாதனை  சாதனை படைக்கப்பட்டது.

இதற்கு முன் ஒரே ஓவரில் 36 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. முதன் முதலாக 2007 டி20 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங்  இங்கிலாந்து அணிக்கு எதிராக  ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசினார்.  இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராடின் ஓவரில் யுவராஜ் சிங் இத்தகைய இமாலய சாதனையை படைத்திருந்தார்.  அதன் பின்பு, கீரான் பொல்லார்ட் உள்ளிட்ட  ஐந்து வீரர்கள் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன் 

முதல்வர் தனிச் செயலாளர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு!

கழிவறை , உடை மாற்றும் அறை கூட நடிகைகளுக்கு கிடையாது : அதிர வைக்கும் ஹேமா அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel