ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அண்டர் 19 தொடரில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் இடம் பெற்றிருந்தார். ஆனால், முதல் ஒருநாள் போட்டியில் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் சமீத் டிராவிட் பிளேயிங் லெவனில் இடம் பெற்றிருக்கவில்லை.
சமித் டிராவிட் இந்திய 19 அணியில் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர் திடீரென்று நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ரோகித் ராஜாவாத் என்ற வீரருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. சமித் டிராவிட் ஏன் அணியிலிருந்து நீக்கப்பட்டார்? இதன் பின்னால் ஏதேனும் அரசியல் இருக்கிறதா என்று ரசிகர்கள் குழம்பி உள்ளனர்.
ஆனால், சரியாக தனது திறமையை நிரூபிக்காத காரணத்தினால் அவர் கடைசிக்கட்டத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. கடைசியாக அவர் விளையாடிய ஏழு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 33 ரன்கள் தான் அடித்து இருந்தார். சமித் அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பிசிசிஐ எந்த ஒரு விளக்கத்தையும் தெரிவிக்கவில்லை.
அதோடு, 2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரிலும் சமித் விளையாட முடியாது. தற்போது, சமித்துக்கு 19 வயதாகிறது. இவர், 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதி பிறந்துள்ளார். 2025 ஆம் ஆண்டு அவருக்கு 20 வயதாகி விடும். இதனால், உலகக் கோப்பை தொடரில் விளையாடும் தகுதியையும் அவர் இழக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ரோகித் சர்மா மதில் மேல் பூனை… எந்தெந்த வீரர்கள் வெளியேறுகிறார்கள்?
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி… “ஏமாற்றம் இருக்காது” – ஸ்டாலின் பேட்டி!