சாம் கரன்,ஷாருக் அதிரடி:ராஜஸ்தான் அணிக்கு வலுவான இலக்கு!

விளையாட்டு

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 187 ரன்கள் அடித்து, 188 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளின் 16 வது சீசனில் குஜராத் டைட்டன்ஸ் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

எஞ்சிய 3 இடங்களுக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கான வாய்ப்பு மிகக்கடினமானதுதான் என்றாலும், புள்ளிப்பட்டியலில் டாப்பில் இருக்கும் அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்து பின்புற வாய்ப்பிருப்பதால் இரு அணிகளும் வெற்றி முனைப்புடன் களமிறங்கின.

தர்மசாலாவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 2 ரன்னுக்கு ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான ஷிகர் தவான் 17 ரன்களுக்கும், அதர்வா டைட் 19 ரன்களுக்கும், லிவிங்ஸ்டோன் 9 ரன்களூக்கும் ஆட்டமிழக்க, 50 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

அதன்பின்னர் ஜித்தேஷ் ஷர்மா மற்றும் சாம் கரன் ஆகிய இருவரும் இணைந்து பொறுப்புடன் பேட்டிங் செய்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

அதிரடியாக விளையாடி 28 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 44 ரன்கள் அடித்து ஜித்தேஷ் ஷர்மா ஆட்டமிழக்க, அதன்பின்னர் இறங்கிய ஷாருக்கான் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 23 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 41 ரன்கள் அடித்தார்.

சாம் கரன் 31 பந்தில் 49 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் பஞ்சாப் அணி 187 ரன்கள் எடுத்தது. 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மாமன்னன்: வடிவேலு குரலில் ராசா கண்ணு!

பாஜக செயற்குழு: திமுக அரசுக்கு எதிராக தீர்மானம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *