T20 World Cup 2022 : உலகக்கோப்பை: சாம் கரன் வேகத்தில் சாய்ந்தது ஆப்கானிஸ்தான்!

T20 விளையாட்டு

ஆஸ்திரேலியாவில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கி உலகக்கோப்பை டி20 போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இன்று தொடங்கிய சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அதில் ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணிலேயே 89 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தியது.

இதனைதொடர்ந்து மாலை 4.30 மணிக்கு துவங்கிய போட்டியில் இங்கிலாந்து – ஆஃப்கானிஸ்தான் அணிகள் மேற்கு ஆஸ்திரேலியாவில் இருக்கக்கூடிய பெர்த் மைதானத்தில் மோதின .

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்ய ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

சாம் கர்ரண் அசத்தல் பெளலிங்!

ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஹஸ்ரதுல்லா ஷசாய் 7 ரன்களிலும் , ரஹ்மனுல்ல குர்பாஸ் 10 ரன்களிலும் ஆட்டமிழக்க, இப்ராஹிம் ஜத்ரான் 32 ரன்களும் மற்றும் உஸ்மான் 30 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர் .

அடுத்து வந்த ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 19.4 ஓவர் முடிவில் 112 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.

இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய இளம் வீரரான சாம் கர்ரண் 3.4 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அவரது கேரியரில் சிறந்த பந்துவீச்சு இதுவாகும்.

Sam Curran bowling beat afganistan in t20 WC

ஆரம்பத்தில் தடுமாற்றம்!

இதனை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் முதலில் களமிறங்கிய கேப்டன் ஜோஸ் பட்லர் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹேல்ஸ் 19 ரன்களில் ஆட்டமிழந்தார் .

அவரை தொடர்ந்து பென்ஸ்டோக்ஸ் (2) மற்றும் மாலன்(18) ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

வெற்றிக்கு அழைத்து சென்ற லியாம்!

எனினும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய லியாம் லிவிங்க்ஸ்டன் 29 ரன்கள் குவித்து அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றார்.

Sam Curran bowling beat afganistan in t20 WC

இதனால் இங்கிலாந்து அணி 18.1 ஓவர்களில் 113 ரன்கள் குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியுள்ளது.

சூப்பர் 12 சுற்றில் முதல் நாள் போட்டிகள் விறுவிறுப்பாக முடிந்துள்ள நிலையில்
நாளை மதியம் 1.30 மணிக்கு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்நிலையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

தமிழகத்தில் துணைவேந்தர் பதவி விற்பனை: பன்வாரிலால் கருத்துக்கு கே.பி.அன்பழகன் எதிர்ப்பு!

காந்தாரா எதிரொலி: மாதம் ரூ.2000 வழங்கும் கர்நாடக அரசு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *