2007 ல் ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்தாலும் ஸ்லீப்பில் விளையாடும் பொழுது தோனியின் கருத்தை தான் கேட்டதாகவும், அவரின் கருத்து தனக்கு அமைதியை தரும் என்றும் தன்னுடைய பழைய நினைவுகளை இனிமையுடன் பகிர்ந்துள்ளார் இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.
இந்திய கிரிக்கெட் அணியை மிகவும் சிறப்பாக வழிநடத்தியதில் மிகமுக்கியமானவர் எம்.எஸ்.தோனி.
அவர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டி 20 உலகக்கோப்பை, ஒருநாள் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய மூன்று கோப்பைகளையும் வென்று சாதனை படைத்திருக்கிறது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் கேப்டன்களில் தோனியும் ஒருவர். 2007 டி 20 உலக கோப்பையை வெல்லும் பொழுது அணியில் பல மூத்த வீரர்கள் இருந்தாலும் கேப்டன் பதவி ஜூனியரான தோனிக்கே வழங்கப்பட்டது.
இந்நிலையில், தோனி குறித்தான தனது அனுபவங்களை சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பேசிய அவர் ’ இது இங்கிலாந்தில் நடந்தது. எங்கள் அணியை வழிநடத்த கூடிய ஒரு ஜூனியர் வீரர் எங்களிடம் இருக்கிறார்.
அவர் நீங்கள் நெருக்கமாகப் பார்க்க வேண்டிய ஒருவர். நான் அவருடன் பல உரையாடல்களை நடத்தியிருக்கிறேன், பெரும்பாலும் களத்தில், நான் முதல் ஸ்லிப்பில் பீல்டிங் செய்யும் இடத்தில் தோனியிடம்,
‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்பேன் ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்தாலும், நான் தோனியிடம் கேட்பேன்,
அவரிடம் இருந்து வரும் கருத்து மிகவும் பலம் வாய்ந்ததாகவும், அமைதியை தருவதாகவும் மேலும் அந்த கருத்து முதிர்ச்சியானதாக இருக்கும்.
நல்ல கேப்டன்ஷிப் என்பது எதிரணியை விட ஒரு படி மேலே இருப்பது தான். பத்து பந்துகளில் பத்து விக்கெட்டுகளையும் எடுக்க முடியாது. அதை திட்டமிட வேண்டும்.
ஓவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஸ்கோர்போர்ட் முக்கியமானது. அந்த குணங்களை நான் தோனியிடம் கண்டேன். அதனால் தான் நான் அவரின் பெயரை பரிந்துரைத்தேன்’ என்று கூறியுள்ளார்.
மேலும், சச்சினிடம் நீங்கள் கிரிக்கெட்டை தேர்ந்தெடுத்தீர்களா இல்லை உங்களை கிரிக்கெட் தேர்ந்தெடுத்ததா என்ற கேள்விக்கு சிரித்து கொண்டே பதிலளித்த அவர் ‘நான் தான் கிரிக்கெட்டை தேர்ந்தெடுத்தேன். நான் ஹாக்கி , கால்பந்து , பேட்மிட்டன் போன்ற விளையாட்டுகளை விளையாடினேன் ஆனால் கிரிக்கெட் தான் எனக்கு நெருக்கமாகவும் என் மனதில் முதலிலும் இருந்தது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மு. வா. ஜெகதீஸ் குமார்
அவருக்கு மரியாதை கொடுங்கள்: ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த அப்ரிடி
எம்.பி.க்கள் மாஸ்க் அணிய அறிவுறுத்தல்!
எம்.பி.க்கள் மாஸ்க் அணிய அறிவுறுத்தல்!