இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மூன்றாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக கோப்பை இறுதிப்போட்டி இன்று (நவம்பர் 19) மதியம் குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 9 லீக் ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெற உள்ள உலக கோப்பை போட்டியை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண்பதற்காக அகமதாபாத் விமான நிலையத்திற்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று காலை வந்தடைந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக இறுதிப்போட்டியை காண வந்துள்ளேன். இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மூன்றாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றும். இதற்காக தான் இந்திய அணி ரசிகர்கள் இவ்வளவு நாட்களாக காத்திருந்தனர். கோடிக்கணக்கான ரசிகர்களின் பிரார்த்தனைக்கு இன்று பதில் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
நிர்மலா சீதாராமனிடம் முறையீடு: ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை!
நாளை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு!