இன்றைய ஐபிஎல் போட்டியில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும்டெல்லி கேப்பிட்டல்ஸ் விளையாடி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்நிலையில் தொடக்க வீரர்களாக பெங்களூரு அணியைச் சேர்ந்த விராட் கோலி, டூ பிளஸிஸ் ஜோடி களமிறங்கியது.
தன்னுடைய ஆட்டத்தை அதிரடியுடன் தொடங்கிய விராட் கோலி டெல்லி அணியின் பந்து வீச்சாளர் நார்ட்ஜே ஓவரில் 2 பவுண்டரிகளை அடித்தார்.
இதனையடுத்து கோலியை கட்டுப்படுத்த அக்சர் பட்டேலை 2 வது ஓவரிலேயே வார்னர் பயன்படுத்தினார். இதில் 5 ரன்கள் மட்டுமே சென்றது.
பின்னர், வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளை அடித்து நொறுக்கிய விராட் கோலி
34 பந்துகளில்அரைசதம் கடந்த நிலையில் அடுத்த பந்திலேயே தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.
இந்நிலையில், இந்த இன்னிங்ஸ் மூலம் விராட் கோலி சில சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி, ஐபிஎல் தொடரில் பவர்பிளேவில் அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் கோலி 2220 ரன்கள் அடித்ததன் மூலம் 5வது இடத்தை பிடித்துள்ளார்.
இதே போன்று ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டிலும் விராட் கோலி 11 ஆயிரத்து 500 ரன்கள் அடித்து மற்றொரு சாதனை படைத்துள்ளார். இதில் ஐபிஎல் தொடரில் மட்டும் 6819 ரன்கள் அடங்கும். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மட்டும் கோலி 2510 ரன்களை அடித்துள்ளார்.
இதே போன்று டெல்லி அணிக்கு எதிராக கோலி 9 முறை அரைசதமும், ஐபிஎல் தொடரில் அதிக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் 2வது இடத்தையும் பெற்றுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
குட்கா முறைகேடு: முன்னாள் டிஜிபி-யிடம் விசாரணை நடத்த அனுமதி!
ஒரு கனவு: ‘விமானம்’ ஃபர்ஸ்ட் லுக்!