பெங்களூரு அணியில் மாற்றம்: டூ பிளஸிஸ் திட்டம் வெற்றி பெறுமா?

விளையாட்டு

கடந்த மார்ச் 31 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கிய ஐபிஎல் போட்டியின் 20 வது லீக் ஆட்டம் இன்று (ஏப்ரல் 15 )நடைபெறுகிறது. இதில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடுகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி விளையாடியுள்ள 4 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதற்கு டெல்லி அணியின் பேட்டிங்தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் அக்சர் படேலை கடந்து வேறு எந்த பேட்ஸ்மேனும் சொல்லிக் கொள்ளும் வகையில் கடந்த ஆட்டங்களில் விளையாடவில்லை.

அதேபோல் டேவிட் வார்னரும் 4 போட்டிகளில் 209 ரன்கள் குவித்திருந்தாலும், அவரின் ஸ்ட்ரைக் 118ஆக மட்டுமே உள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போல் ஆடுவதால், டெல்லி அணியின் ஸ்கோரை எதிரணிகள் எளிதாக சேஸ் செய்துவிடுகின்றனர். இருப்பினும் மிட்செல் மார்ஷ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால், பேட்டிங் வரிசையில் பலம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் மைதானத்தில் அதிக சிக்சர்கள் அடிக்க முடியும் என்பதால், வெற்றிக்காக டெல்லி அணி போராடும் என்று எதிர்பார்க்கலாம்.

மறுபக்கம் பெங்களூரு அணியை பொறுத்தவரை 3 போட்டிகளில் விளையாடி 2ல் தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக லக்னோ அணிக்கு எதிரான தோல்வி அந்த அணியை வெகுவாக அசைத்து பார்த்துள்ளது. சொந்த மண்ணில் 200 ரன்களுக்கு மேல் விளாசியும் அந்த அணி தோல்வியடைந்தது.

இருப்பினும் ஆர்சிபி அணிக்கு கிடைத்த ஒரே மகிழ்ச்சி விராட் கோலி, டூ பிளஸிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பதுதான். அதேபோல் பந்துவீச்சு தான் பெங்களூரு அணியின் பிரச்சனையாக உள்ளது.

அதனை மாற்றவே ஹசரங்கா அணியுடன் இணைந்துள்ளார். இதனால் டேவிட் வில்லி அல்லது வெய்ன் பார்னல் ஆகிய இருவரில் ஒருவர் இன்றையப் போட்டியில் நீக்கப்படலாம்.

இதுவரை இரு அணிகளும் மோதியுள்ள 27 போட்டிகளில் 10 போட்டிகளில் பெங்களூரு அணியும், 7 போட்டிகளில் டெல்லி அணியும் வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ரயில் மறியல்: காங்கிரஸ் கட்சியினர் கைது!

“இந்த பூச்சாண்டி எல்லாம் இங்க பலிக்காது“: அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதில்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *