ராஸ் டெய்லரை கன்னத்தில் அறைந்த ராஜஸ்தான் அணி உரிமையாளர் யார்?

Published On:

| By Selvam

நியூஸிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். அவர் தனது சுயசரிதைப் புத்தகத்தை ராஸ் டெய்லர் பிளாக் அண்ட் ஒயிட் என்ற பெயரில் எழுதி ஆகஸ்டு 11 ஆம் தேதி வெளியிட்டார். அது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இந்தப் புத்தகத்தில், இங்கிலாந்து அணிக்காக தாம் விளையாடிய போது எதிர்கொண்ட நிறவெறி பிரச்சனைகள் குறித்து எழுதியுள்ளார். இப்புத்தகம் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நியூஸிலாந்து அணிக்காக தாம் விளையாடிய போது உடைமாற்றும் அறையில் வைத்து சக அணி வீரர்களால், நிறவெறிக்கு உள்ளானதாக அவர் தெரிவித்துள்ளார். தான் பழுப்பு நிறத்தில் இருப்பது தான் அதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உடை மாற்றும் அறையில் வைத்து நியூசிலாந்து அணி வீரர் என்னிடம் பேசும் போது, “ராஸ், நீங்கள் பாதி நல்லவர்.  ஆனால் நீங்கள் எந்த பாதி நல்லவர்? நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்கு தெரியாது” என்று தெரிவித்தார்.

இதனைப் போன்று மற்ற வீரர்களும் என்னுடைய இனத்தை குறித்து பேசியுள்ளனர் என்று அவர் தனது புத்தகத்தில் தான் எதிர்கொண்ட நிறவெறி பிரச்சனைகள குறித்து எழுதியுள்ளார்.

ஐபில் கிரிக்கெட்டில் ராஸ் டெய்லர் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய போது, அணியின் உரிமையாளர் தன்னை கன்னத்தில் அறைந்ததாக சுயசரிதைப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் புத்தகத்தில் "ராஜஸ்தான் அணிக்காக நான் விளையாடிய போது, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை ராஜஸ்தான் அணி எதிர்கொண்டது. முதலில் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 194 ரன்கள் அடித்திருந்தது. அந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 195 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அந்தப் போட்டியில் நான் ரன் ஏதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனேன்.

பின்னர் அணி வீரர்கள், நிர்வாகத்தினர் என நாங்கள் அனைவரும் ஒரு ஓட்டல் பாரில் இருந்தோம். அப்போது அணி உரிமையாளர் ஒருவர் என்னிடம் வந்து, ’ராஸ், நீங்கள் டக் அவுட் ஆவதற்காகவா உங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்கிறோம்?’ என்று கேள்வி கேட்டார்.

நான் பதில் சொல்வதற்குள் மூன்றில் இருந்து நான்கு முறை என்னைக் கன்னத்தில் அறைந்துவிட்டு அவர் சிரித்துக்கொண்டு இருந்தார்.

அவர்  கோபமாக என்னை அறையவில்லை. ஆனால் அது முழுக்க முழுக்க விளையாட்டிற்காகவும், நடிப்பிற்காகவும்தான் என்னை அடித்தாரா என்றும் எனக்குத் தெரியவில்லை. பல தொழில்முறை விளையாட்டுகளில் இதுபோன்று நடப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 2008 முதல் 2010 வரை ராஸ் டெய்லர் விளையாடினார். 2011-ம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக ராஸ் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டுகளில் ராஜஸ்தான் அணி உரிமையாளர்கள் மனோஜ் பண்டாலே மற்றும் லச்லான் முர்தோ  ஆகியோர்தான். ஆக  ராய் டெய்லரை இவர்களில் ஒருவரே கன்னத்தில் அறைந்திருக்க வேண்டும் என்ற விவாதம் நடந்து வருகிறது.

செல்வம்

பிரதமரின் வார்த்தைகள்: மகளிர் கிரிக்கெட் கேப்டன் பெருமிதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share