ரொனால்டோவுக்கு வயது 40… அப்படி என்ன சாப்பிடுகிறார்?

Published On:

| By Kumaresan M

கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி 40வது வயது பிறந்துள்ளது.

மான்செஸ்டர் யுனைடெட் முன்னாள் சூப்பர்ஸ்டாரான ரொனால்டோவின் திறமையும் தன்னம்பிக்கையும் சிறிதும் குறையவில்லை. 40வது பிறந்த நாளில் அவர் படைத்த சில சாதனைகளை பார்ப்போம். ronoldo turns 40

போர்ச்சுகல் அணிக்காக அதிக சர்வதேச போட்டிகளில் ஆடியவர். ஆடிய ஆட்டங்கள் 217.

போர்ச்சுகல் அணிக்காக அதிக சர்வதேச கோல்கள் அடித்தவர். மொத்த கோல்கள் 135. 48 சர்வதேச அணிகளுக்கு எதிராக ரொனால்டோ கோல் அடித்துள்ளார். ஐரோப்பிய தகுதி சுற்று போட்டிகளில் மட்டும் 40 கோல்களை அடித்துள்ளார்.

பிபா உலகக் கோப்பையில் அதிக வயதில் ஹாட்ரிக் கோல் அடித்த பெருமை உண்டு. அப்போது, 33 ஆண்டு 130 நாட்கள் ஆகியிருந்தது. 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த உலக கோப்பையில் ஸ்பெயினுக்கு எதிராக இந்த சாதனையை படைத்தார்.

உலகக் கோப்பை தொடரில் அதிகபட்சமாக 22 போட்டிகளில் விளையாடியவர் இதுவரை 10 முறை ஹாட்ரிக் கோல்கள் அடித்துள்ளார். கால்பந்து வரலாற்றில் 10 ஹாட்ரிக் கோல்கள் அடித்தது இவர் ஒருவரே.

ஒரே பிபா உலக கோப்பையில் அதிகபட்சமாக 7 கோல்கள் அடித்தவர். கிளப் மற்றும் சர்வதேச போட்டிகளில் இதுவரை 923 கோல்களை அடித்துள்ளார். 30 வயதுக்கு பிறகு மட்டும் 454 கோல்களை அடித்திருக்கிறார்.

பெனால்டி வழியாக மட்டும் 171 கோல்கள் அடித்துள்ளார். (டை-பிரேக்கர் சேர்க்கப்படவில்லை) தலையால் முட்டி மட்டும் 151 கோல்களை அடித்திருக்கிறார்.

ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட், யுவென்டஸ் போன்ற அணிக்ளுக்காக ஆடிவிட்டு தற்போது சவுதியில் அல் நாஸர் அணிக்காக விளையாடி வருகிறார்.

உலகக் கோப்பையை வெல்லாதது மட்டுமே ரொனால்டோவின் கால்பந்து வாழ்க்கையில் ஒரே பின்னடைவு. பிட்னெஸ்க்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் ரொனால்டோவிடத்தில் குடி பழக்கம், புகைக்கும் பழக்கம் எதுவும் கிடையாது. சிக்கன், ஒமேகா சத்து நிறைந்த மீன் என புரோட்டின் மிகுந்த உணவுகள், காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share