உலகில் ஆன்லைனின் ரொனால்டோவை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 100 கோடியை எட்டியுள்ளது. இந்த சாதனையை எட்டிய உலகின் முதல் மனிதர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார்.
போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் ரொனால்டோவுக்கு தற்போது 39 வயதாகிறது. இங்கிலீஸ் பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட், ஸ்பானீஷ் லீக்கில் ரியல்மாட்ரிட், இத்தாலி சீரி ஏ-வில் யுவென்டஸ் போன்ற உலகின் முன்னணி கிளப் அணிகளுக்காக விளையாடியுள்ளார். தற்போது, சவுதி அரேபிய லீக்கில் அல்நாஸர் அணிக்காக விளையாடி வருகிறார்.
சமீபத்தில் ரொனால்டோ தனியாக யூடியூப் சேனல் தொடங்கினார். இதையடுத்து, அவரை இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ், யூடியூப் என அனைத்து சமூகவலைத் தளங்கள் மூலம் அவரை பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 100 கோடியை எட்டியது.
கடந்த செவ்வாய்க்கிழமை இந்த சாதனையை ரொனால்டோ எட்டினார். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 63.9 கோடி பேர் பின் தொடருகின்றனர். இது உலக மக்கள் தொகையில் 8 சதவிகிதம் ஆகும்.
பேஸ்புக்கில் 17 கோடி பேரும் எக்ஸ் பக்கத்தில் 11.3 கோடி பேரும் ரொனால்டோவை பின்தொடருகின்றனர். யூடியூப் சேனலை ரொனால்டோ தொடங்கிய 12 மணி நேரத்தில் ஒரு கோடி பேர் சப்ஸகிரைப் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
100 கோடி மக்கள் தன்னை பின் தொடர்வதையடுத்து, ரொனால்டோ தன் நன்றியை மக்களுக்கு தெரிவித்து கொண்டுள்ளார். தான் எப்போதும் தனது குடும்பத்துக்காகவும் உங்களுக்காகவும்தான் விளையாடி வருகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஒரேடியாக உயர்ந்த தங்கம்… நகைப்பிரியர்கள் ஷாக்! – சவரன் எவ்வளவு தெரியுமா?
ஸ்ருதிக்கு நடந்த துயரம் கற்பனைக்கு எட்டாதது!- நடிகர் மம்முட்டி வேதனை!