விரக்தியில் குழந்தைப்போல் தேம்பி அழுத ரொனால்டோ: வீடியோ வைரல்!

டிரெண்டிங் விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் பெனால்டி ஷாட்டை கோல் கீப்பர் தடுத்ததால் விரக்தியில் ரொனால்டோ தேம்பி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மோசமான சாதனையை முறியடித்த ரொனால்டோ

கால்பந்து உலகின் ஜாம்பவான்களாக அறியப்படுப்பவர்கள் ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி. இருவரும் உலக கால்பந்து வரலாற்றில் பல சாதனைகளை படைத்துள்ளனர்.

ஆனால், தற்போது ஒரு மோசமான சாதனையை இருவரும் செய்திருக்கிறார்கள். இப்போது கோபா அமெரிக்கா தொடரில் அர்ஜண்டினா அணிக்காக மெஸ்ஸி விளையாடி வருகிறார். அதேபோல், யூரோ கோப்பை தொடரில் போர்ச்சுகல் அணிக்காக ரொனல்டோ விளையாடி வருகிறார்.

இருவரும் தங்களது கால்பந்து கேரியரில் முதன்முறையாக நேற்று வரை ஒரு கோல் கூட அடிக்காமல் குரூப் சுற்றை கடந்துள்ளனர். இது ஒரு மோசமான சாதனையாகும். ஆனால், நேற்று நடைபெற்ற யூரோ கால்பந்து போட்டியில் ரொனால்டோ போர்ச்சுகல் அணிக்காக விளையாடி ஒருகோல் அடித்து அந்த மோசமான சாதனையை முறியடித்து உள்ளார்.

தேம்பி அழுத ரொனால்டோ

யூரோ கோப்பை 2024 கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தொடக்க சுற்று போட்டிகள் நிறைவுபெற்று தற்போது காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் நேற்று (ஜூலை 1) நள்ளிரவில் நடைபெற்ற போட்டியில் போர்ச்சுக்கல் மற்றும் ஸ்லோவேனியா அணிகள் மோதின. இந்த போட்டியில் பெனால்டி ஷாட் அவுட் மூலம் ஸ்லோவேனியா அணியை வீழ்த்தி போர்ச்சுகல் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

போட்டியின் முதல் பாதியில் 0-0 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் இருந்ததால் பெனால்டி கோல் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில், தனது முதல் கோலை அடிக்க முயன்ற போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முயற்சியை ஸ்லோவேனியா கோல் கீப்பர் ஜான் ஓப்லாக் முறியடித்தார். இதை எதிர்பாராத ரொனால்டோ கோலை மிஸ் செய்த அதிர்ச்சியில் தேம்பி அழுதார்.

பின்னர் சுதாரித்துக் கொண்ட ரொனால்டோ போட்டியின் அடுத்த பாதியில் போர்ச்சுகல் அணிக்கான தனது முதல் கோலை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஆனால், தனது முதல் கோலை மிஸ் செய்து ரொனால்டோ தேம்பி அழுத வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் சவுதி யூரோ கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் தனது அல்-நாசர் அணி தோல்வி அடைந்ததால் ரொனால்டோ மைதானத்திலேயே கதறி அழுதது குறிப்பிடத்தக்கது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராமநாதபுரம் மீனவர்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்!

ஜெமினியை ‘ஆக்‌ஷன் ஹீரோ’வாக ஆக்கிய ’எல்லோரும் இந்நாட்டு மன்னர்’!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *