900 கோல்கள்… கால்பந்து வரலாற்றில் தொட முடியாத சாதனை படைத்த ரொனால்டோ

விளையாட்டு

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ 900 கோல்களை அடித்து இமாலய சாதனை படைத்துள்ளார்.

2024 நேஷன்ஸ் லீக் தொடரில்  நேற்று (செப்டம்பர் 5) நடந்த ஆட்டத்தில்  குரோஷியா அணிக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் அணி மோதியது. இந்த போட்டியின் 7வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணி வீரர் டியாகோ டாலட் முதல் கோலை அடித்தார். அடுத்து கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். இது அவரது 900 ஆவது கோலாக அமைந்தது. இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி 2 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

குரோஷியா அணிக்கு எதிராக கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த கோல் அவரது 131 வது சர்வதேச கோல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒட்டுமொத்தமாக அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 900 கோல்களுடன் முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்ஸி இருக்கிறார். இவர், 859 கோல்களை அடித்துள்ளார்.

கிளப் ஆட்டங்களில் ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக மட்டும் 450 கோல்களை அடித்துள்ளார். இத்தாலி சீரி ஏ தொடரில் யுவென்டஸ் அணிக்காக 121 கோல்களையும், இங்கிலீஸ் பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 145 கோல்களையும்,  போர்ச்சுகல் நாட்டின் ஸ்போர்டிங் லிஸ்பன் அணிக்காக 5 கோல்களையும் அடித்துள்ளார். ரொனால்டோ தற்போது விளையாடி வரும் சவுதி நாட்டின் அல் நசர் அணிக்காக இதுவரை 68 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

மூட நம்பிக்கைப் பேச்சாளர் கைது செய்யப்பட வேண்டும்! – ராமதாஸ்

மகாவிஷ்ணுவின் சர்ச்சை பேச்சு : தட்டி கேட்ட ஆசிரியரை நேரில் பாராட்டிய அன்பில் மகேஷ்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *