அப்பா எப்படி இருக்காரு..? ரோஹித் மகளின் கூல் பதில்!

விளையாட்டு

பத்திரிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கு நின்று, நிதானமாக ரோஹித் சர்மாவின் மகள் சமைரா  முன்பு பதிலளித்த வீடியோ சமூக வலைதளங்களில் இப்போது  வைரலாகி வருகிறது.

2023 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. இதையடுத்து இந்த தோல்வியில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா, மீண்டு வந்து டி 20 தொடரில் விளையாட வேண்டும், என்பதே பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

இந்த நிலையில் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றது போல ரோஹித்தின் மகள் சமைரா மிகுந்த பாஸிட்டிவாக பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் சமைரா ஹோட்டலில் இருந்து தன்னுடைய அம்மாவுடன் வெளியேறுகிறார். அப்போது அவரைப்பார்த்த பத்திரிக்கையாளர் ஒருவர்.  ’உன் அப்பா எங்க?’ என கேட்க, பதிலுக்கு சமைரா, ‘அவர் ரூமில் இருக்கிறார்’ என பதில் சொல்கிறார்.

தொடர்ந்து ‘உன் அப்பா இப்போ எப்படி இருக்காரு?’ என மீண்டும் அவர் கேள்வி எழுப்ப, அதற்கு சமைரா, ‘அவர் ரொம்ப பாஸிடிவ்வா இருக்காரு. இன்னும் ஒரு மாசத்துல அவர் சிரிக்கலாம்’ என்று பதில் அளிக்கிறார். இந்த வீடியோ கொரோனா நேரத்தில் எடுக்கப்பட்டது, என்றாலும் தற்போதைய சூழ்நிலைக்கு மிகவும் கச்சிதமாக பொருந்துகிறது. அதோடு சமைரா துளியும் பயப்படாமல் பதிலளித்த விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

-மஞ்சுளா 

பிக்பாஸ்: விஷ்ணு-பூர்ணிமாவுக்கு FLAMES போட்டு பார்த்த மாயா… ரிசல்ட் என்ன?

ஆளுநர் வழக்கில் தீர்ப்பு: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *