உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு ரோகித் சர்மாவை மட்டும் விமர்சிப்பது நியாயமற்றது என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. இதனால் கேப்டன் ரோகித் சர்மா மீது விமர்சனங்கள் எழுந்தது. ரசிகர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ரோகித் சர்மாவின் கேப்டன்சியை விமர்சித்திருந்தனர்.
இந்தநிலையில் ரோகித் சர்மாவை விமர்சிப்பதை விடுத்துவிட்டு அவரை ஆதரிக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “ரோகித் ஷர்மாவை மக்கள் சற்று அதிகமாக விமர்சிப்பதை நான் காண்கிறேன். கிரிக்கெட் என்பது ஒரு குழு விளையாட்டு. ஒரு நபர் மட்டுமே தோல்விக்கு காரணமாக இருக்க முடியாது. ஆனால் ரோகித் சர்மாவை மட்டும் விமர்சிப்பது நியாயமற்றது.
உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிபோட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை. நீங்கள் அதை பற்றி பேசிவிட்டீர்கள் அதனால் கடந்து செல்லுங்கள். ரோகித் சர்மாவை ஒரு சிறந்த தலைவராக நான் கருதுகிறேன். அவருடன் விளையாடியதிலிருந்து உன்னிப்பாக கவனித்து வருகிறேன். சமீபத்திய முடிவுகளின் அடிப்படையில் அவரை மதிப்பிடுவது நியாயமற்றது. அவர் மீது குற்றம்சாட்டுவதை விடுத்துவிட்டு ஆதரிக்க வேண்டும். பிசிசிஐ அனைத்து கேப்டன்களுக்கும் வழங்கிய ஆதரவை ரோகித் சர்மாவுக்கும் வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
மகளிர் உரிமைத் தொகை: அரசாணை வெளியீடு!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!