IPL2024: மீண்டும் திறந்த கதவுகள்… கேப்டன் பதவி பிளஸ் 20 கோடியுடன், ரோஹித்துக்கு வலை வீசும் அணி?

Published On:

| By Manjula

ஐபிஎல் அணிகள் வீரர்களை வாங்க, விற்க செய்யலாம் என்ற விதிமுறை மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளது.

ஐபிஎல் தொடரை பொறுத்தவரை பிற அணிகளில் இருந்து தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கவும், தங்களிடம் உள்ள வீரர்களை விற்கவும் செய்யலாம் என்னும் விதி நடைமுறையில் இருக்கிறது.

ஐபிஎல் தொடர் முடிந்த அடுத்த மாதத்தில் இருந்து இந்த விதிமுறையை பயன்படுத்தி அணிகள் வீரர்களை வாங்கி கொள்ளலாம்.

அதன்படி இந்த ஆண்டு துபாயில் 19-ம் தேதி நடைபெறவுள்ள மினி ஏலத்துக்கு முன் டிசம்பர் 12-ம் தேதியுடன் இந்த விதிமுறை முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் மீண்டும் இந்த விதிமுறை வருகின்ற டிசம்பர் 20-ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. இதை பயன்படுத்தி ஐபிஎல் துவங்குவதற்கு 1 மாதத்திற்கு முன்பு வரை வீரர்களை அணிகள் வாங்கி கொள்ளலாம்.

தங்களிடம் உள்ள வீரர்களை விற்கவும் செய்யலாம். இந்த நிலையில் மினி ஏலத்திற்கு பின்னர் பெரும்பாலான வீரர்கள் அணி தாவலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

குறிப்பாக மும்பையின் முன்னாள் கேப்டன் ரோஹித்துக்கு இந்த விதிமுறை சாதகமாக அமைவதற்கு வாய்ப்புகள் கூடி வந்துள்ளன. அதன்படி ரூபாய் 20 கோடி+கேப்டன் என்ற ஆபருடன் டெல்லி அணி அவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாம்.

மும்பை நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டதாலும், இதற்கு மேல் அணியிலும் தனக்கான இடம் கேள்விக்குறி ஆகி விட்டதாலும் ரோஹித் இதை ஏற்று கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

குறிப்பாக ஹர்திக் பாண்டியாவின் கீழ் ஆடுவதற்கு அவரின் ஈகோ சம்மதிக்காது என்பதால், டெல்லிக்கு கிரீன் சிக்னல் கொடுக்கும் முடிவுக்கு ரோஹித்தும் வந்து விட்டாராம்.

ரிஷப் பண்ட் அடிக்கடி காயம் அடைவதாலும், ஒருமுறை கூட கோப்பை வெல்லாததாலும், அணியை வழிநடத்தி செல்ல ஒரு சிறந்த கேப்டன் தேவை என டெல்லி ரோஹித்துக்கு ஸ்கெட்ச் போட்டு வருகிறது.

ஒருபுறம் சென்னை ரோஹித்தை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நடைமுறையில் அதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளன.

அடுத்த கேப்டன்கள் வரிசையில் ஜடேஜா, ருத்துராஜ் அணியில் இருக்கின்றனர். அதோடு இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்ய சென்னை அணி நிச்சயம் முன்வராது.

அனைத்தையும் தாண்டி சென்னை அணிக்கு ரோஹித் வந்தாலும், ஒரு வீரராக ஆடுவதற்கு அவரும் சம்மதிக்க மாட்டார்.

எனவே தன்னுடைய எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு அவர் டெல்லி பக்கம் சாயவே எக்கச்சக்க வாய்ப்புகள் உள்ளன. மினி ஏலத்திற்கு பின் ரோஹித் தவிர சூர்யகுமார், பும்ராவும் அணி மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருடம் இல்லாவிட்டாலும் கூட 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு பின் ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நிகழக்கூடும்.

ஏனெனில் மாற்றம் ஒன்றே மாறாதது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

கனமழை: தூத்துக்குடி விமானங்கள் மதுரையில் தரையிறக்கம்!

தென் மாவட்டங்களில் கனமழை: வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel