ரோகித் சர்மா மதில் மேல் பூனை… எந்தெந்த வீரர்கள் வெளியேறுகிறார்கள்?

விளையாட்டு

வரும்  2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் பல மாற்றங்கள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

அதன்படி, பி.சி.சி.ஐ தற்போது அணியிலுள்ள வீரர்களில் 6 பேர் வரை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கும் என்று சொல்லப்படுகிறது. அதே வேளையில், அணிகள் தரப்பில் 8 பேர் வரை தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால், பல அணிகள் நீண்ட காலமாக விளையாடிய வீரர்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. எந்தெந்த வீரர்கள் அணி மாற வாய்ப்பு அதிகம் என்று பார்க்கலாம்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா அந்த அணியில் இருந்து விடுவிக்கப்படலாம். தற்போது, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக இருக்கிறார். எனவே, ரோகித் சர்மா மற்றொரு அணிக்கு செல்ல வாய்ப்பு அதிகமுள்ளது. லக்னோ சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து கே.எல். ராகுல் பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு மாறக் கூடும்.

ஆர்.சி.பி அணியில் இருந்து 40 வயதான டுப்லெசி விடுவிக்கப்படலாம்.  இவர் வேறு ஏதாவது அணிக்கு கோச்சாக மாற வாய்ப்புள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வெங்கடேஷ் ஐயர் வெளியேற வாய்ப்பு அதிகமுள்ளது.

அதே போல  கடந்த சீசனில் ஆர்.சி.பி அணி  14. 25 கோடி கொடுத்து கிளன் மெக்ஸ்வெல்லை வாங்கியது. மெக்ஸ்வெல் கடந்த சீசனில் சரியாக திறமையை வெளிப்படுத்தவில்லை. இதனால், இவரின்  நிலைமை பரிதாபகரமான நிலையில்தான் உள்ளது. எனவே, இவரும்  அணி மாற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. தோனியை எப்படியும் சென்னை அணி எப்பாடு பட்டாவது தக்க வைத்துக் கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

2025 ஐ.பி.எல் மெகா ஏலம் நவம்பர் மாதம் இரண்டு அல்லது மூன்றாவது வாரத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாள்கள் இந்த ஏலம் நடைபெறும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

லெபனான் மக்கள் மீது பரிவு காட்டும் இஸ்ரேல் பிரதமர்: வீடியோ வெளியிட்டு விளக்கம்!

தொடர்ந்து உயரும் தங்கம் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா?

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0