இந்தியா – பாகிஸ்தான் மோதல்: ரோஹித் சர்மாவின் பதில்!

விளையாட்டு

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உட்பட ஆறு அணிகள் பங்கேற்கும் டி20 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27ஆம் தேதி தொடங்குகிறது.

இதில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியாவும் பாகிஸ்தானும் 28ஆம் தேதி துபாயில் லீக் சுற்றில் மோதுகின்றன.

இந்தப் போட்டி குறித்து பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துவரும் நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை அனைவரும் பார்ப்பதால் அழுத்தம் நிறைந்த விளையாட்டாக மாறிவிட்டது என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் அணிக்குள் நாங்கள் ஒரு சாதாரண சூழ்நிலையை உருவாக்க விரும்புகிறோம். இந்த விளையாட்டை நமக்குள்ளேயே அதிகமாக விளம்பரப்படுத்த விரும்பவில்லை. வெளியில் உள்ளவர்கள் விளையாட்டை மிகைப்படுத்தட்டும், அதைச் செய்வது அவர்களின் வேலை.

ஆனால், எங்களைப் பொறுத்தவரை இது கிரிக்கெட் விளையாட்டு மற்றும் பேட் மற்றும் பந்துக்கு இடையிலான போட்டி. நாங்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.

எங்களைப் பொறுத்தவரை பாகிஸ்தான் அணி, நாங்கள் விளையாடும் மற்றொரு எதிரணி.

நாங்கள் விளையாடும் மற்ற இந்தியா – பாகிஸ்தான் விளையாட்டைப் போலவே இந்த மோதல் இருக்கும். நாங்கள் விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறோம்” என்று பதிலளித்துள்ளார்.

-ராஜ்

டி20 யில் 600 விக்கெட்டுகள்: வரலாற்று சாதனையை நிகழ்த்திய பிராவோ

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *