2024 ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்திற்கு முன்னதாக, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் முழு தொகை கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றியது. rohit sharma in Chennai team
இதை தொடர்ந்து யாரும் எதிர்பாரா விதமாக, அந்த அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு, ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக மும்பை அணி நிர்வாகம் அறிவித்தது.
இந்த அறிவிப்பு ரோகித் சர்மா ரசிகர்கள் இடையேயும், மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் இடையேயும் மிகுந்த எதிர்ப்பை பெற்றது. இதன் காரணமாக, சமூக வலைத்தளங்களில் அந்த அணியை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிரடி வீழ்ச்சியை சந்தித்தது.
பல கிரிக்கெட் ஜாம்பவான்களும், மும்பை அணியின் இந்த முடிவு அதிர்ச்சி அளிப்பதாக கருத்து தெரிவித்திருந்தனர்.
மும்பை அணிக்கு திரும்ப வேண்டும் என்றால், கேப்டன் பதவி வழங்க வேண்டும் என ஹர்திக் பாண்டியா நிர்பந்தித்தாக தகவல்கள் வெளியான நிலையில், இது ரசிகர்களை மேலும் அதிருப்தி அடைய செய்தது.
அதுமட்டுமின்றி, மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரர்களான ஜஸ்பிரீத் பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரும், மறைமுகமாக தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.
இப்படியான சூழ்நிலையில், ரோகித் சர்மாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேடிங் முறையில் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தது.
இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், இந்த தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
“சென்னை அணிக்கு வீரர்களை டிரேடிங் செய்யும் முறை மீது நம்பிக்கை இல்லை. அப்படியே டிரேடிங் செய்ய விரும்பினாலும், ரோகித் சர்மாவுக்கு சமமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேட் செய்யும் அளவிலான வீரர் எங்களிடம் இல்லை.
நாங்கள் இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியிடம் எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. அப்படியான எண்ணமும் எங்களிடம் இல்லை”, என காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
ரோகித் சர்மா மும்பை அணிக்கு இதுவரை 5 ஐ.பி.எல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
நெல்லைக்கு வெண்ண… குமரிக்கு சுண்ணாம்பா? : அப்டேட் குமாரு
“காளி கோயில்ல பூஜை செஞ்சியே என்னாச்சு பாத்தியா?”- தண்டனைக்கு பின் ஆதரவாளரிடம் சிரித்த பொன்முடி
rohit sharma in Chennai team