டி20 உலகக்கோப்பை போட்டியின் போது ரோஹித் சர்மாவை பார்க்க மைதானத்திற்கு நடுவே இன்று (அக்டோபர் 6) ஓடிவந்த ரசிகருக்கு 6.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
கிரிக்கெட்டை ஒரு மதமாக பார்க்கும் இந்தியாவில் அதில் விளையாடும் வீரர்களுக்கு கோடிகணக்கில் ரசிகர்கள் உள்ளனர். அப்படிப்பட்டவர்களில் சிலர் வீரர்கள் விளையாடும் போது அங்கு திடீரென மைதானத்தின் வேலியை தாண்டி இறங்கி அதிர்ச்சி அளிப்பது உண்டு.
இதனை பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் நாம் பார்த்திருப்போம். அதே சம்பவம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஜிம்பாவே – இந்தியா இடையேயான ஆட்டத்திலும் அரங்கேறியுள்ளது.
இந்தியாவுக்கும் ஜிம்பாப்வேக்கும் இடையிலான இரண்டாவது இன்னிங்ஸின் போது ரோகித் சர்மாவின் இளம் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் இந்தியக் கொடியை ஏந்தியபடி மைதானத்திற்குள் திடீரென நுழைந்தார்.
அதனை கவனித்த பாதுகாப்பு படையினர் மைதானத்திற்கு நடுவே அவரை பிடித்து இழுத்து சென்றனர். அப்போது ரோகித் சர்மாவை கண்ட அந்த ரசிகர் கண்ணீர் ததும்ப அவருடன் பேச முயன்றார். எனினும் பாதுகாவலர்களை அந்த ரசிகரை துரிதமாக அழைத்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அங்கு ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. இதனையடுத்து போட்டியில் இடையூறு ஏற்படுத்தியதற்காக அந்த ரசிகருக்கு இந்திய மதிப்பில் ரூ.6.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட இந்திய அணி, ஜிம்பாப்வேயை 71 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இதன்மூலம் சூப்பர் 12 குரூப் 2ல் எட்டு புள்ளிகளுடன் முதலிடம் பெற்ற இந்தியா, வரும் 10 ஆம் தேதி அரையிறுதியில் இங்கிலாந்தை சந்திக்கிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த ’நாயகன்’ கூட்டணி!
ரசிகர்கள் கொஞ்சும் ரஞ்சிதமே…விஜய் புதிய சாதனை!