2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டங்களுக்கு முன்னதாக, வீரர்களுக்கான ஒருநாள் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி வெளியிட்டுள்ளது. rohit sharma entered into top 5
டாப் 5 இடங்களில் 3 இந்திய வீரர்கள்!
அதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில், இந்த தொடர் முழுவதும் இந்தியாவுக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ரோகித் சர்மா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்த உலகக்கோப்பை தொடரில், இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 1 சதம், 3 அரைசதங்களுடன், மொத்தம் 503 ரன்களை ரோகித் சர்மா குவித்துள்ளார்.
அதேபோல, 2 சதம், 5 அரைசதம் விளாசி, 594 ரன்களுடன் இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள கோலி, ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் 4வது இடத்தில் உள்ளார்.
இந்திய அணியின் இளம் நட்சத்திர துவக்க வீரரான சுப்மன் கில், தொடர்ந்து முதலிடத்தில் தொடர்கிறார்.
இதன்மூலம், பேட்டிங் தரவரிசையில் டாப் 5 இடங்களில், 3 இடங்களை இந்திய வீரர்கள் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
மேலும், இந்த தொடரில் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்துவரும், ஷ்ரேயஸ் அய்யர் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர், முறையே 13வது மற்றும் 17வது இடங்களுக்கு முன்னேறியுள்ளனர்.
பந்துவீச்சிலும் ஆதிக்கம்!
மறுபுறத்தில், பவுலிங் தரவரிசையில் இந்தியாவின் முகமது சிராஜை 2வது இடத்திற்கு பின் தள்ளி, தென் ஆப்பிரிக்காவின் கேஷவ் மகாராஜா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதே சமயத்தில், இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர், 4வது மற்றும் 5வது இடங்களுக்கு முன்னேறியுள்ளனர். இதன்மூலம், பந்துவீச்சிலும் டாப் 5 இடங்களில், 3 இடங்களை இந்திய வீரர்கள் தன்வசப்படுத்தியுள்ளனர்.
இவர்களுடன், இந்த உலகக்கோப்பையில் ஒரு மிரட்டலான என்ட்ரி கொடுத்த முகமது ஷமி 12வது இடத்தில் உள்ளார். மேலும், இந்த பட்டியலில் நவம்பர் 1 அன்று முதலிடத்தில் இருந்த பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஆல் ரவுண்டர் பட்டியலில் 10வது இடம்!
இவர்களை தொடர்ந்து, ஆல்-ரவுண்டர்கள் பட்டியலில், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 10வது இடத்தை பிடித்துள்ளார். மேலும், இந்த உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் மிட்சல் சான்ட்னர் மற்றும் கிளென் மெக்ஸ்வெல் ஆகிய 2 பெரும் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் 5வது இடத்தில் உள்ளனர். rohit sharma entered into top 5
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
கோவா: தெரு நாயால் தரையிறங்காமல் திரும்பிச் சென்ற விமானம்!
பயிர் காப்பீட்டு காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்