மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்கின்றன. rohit sharma breaks Chris Gayle record
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளுமே, எந்த ஒரு மாற்றமும் இன்றி அதே 11 பேரை கொண்டு களமிறங்கியது.
டாஸிற்கு பிறகு துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா – சுப்மன் கில் இணை, இந்தியாவுக்கு அதிரடியான துவக்கத்தை வழங்கியது. ட்ரெண்ட் போல்ட் மற்றும் டிம் சவுதி என நியூசிலாந்து அணியின் 2 முக்கிய பவுலர்களின் பந்துகளை சிதறடித்தார் ரோகித் சர்மா. தனது இந்த ஆக்ரோஷமான துவக்கத்தால், 4 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட, வெறும் 29 பந்துகளில் 47 ரன்களை விளாசி ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், இந்த போட்டியில் தனது 3வது சிக்ஸை விளாசியபோது, ஒரு மிகப்பெரிய சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். உலகக்கோப்பை போட்டிகளில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில், கிறிஸ் கெய்லை (49 சிக்ஸ்கள்) பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.
உலகக்கோப்பை போட்டிகளில் அதிக சிக்ஸ் அடித்த டாப் 5 வீரர்கள்
1 – ரோகித் சர்மா – 51
2 – கிறிஸ் கெய்ல் – 49
3 – கிளென் மேக்ஸ்வெல் – 43
4 – ஏபி டி வில்லியர்ஸ் – 37
5 – டேவிட் வார்னர் – 37
🚨 Milestone Alert 🚨
Captain Rohit Sharma has now hit the most sixes in Men's ODI World Cup 🫡#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/rapyuF0Ueg
— BCCI (@BCCI) November 15, 2023
அதுமட்டுமின்றி, ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்ஸ்களை விளாசிய வீரர்கள் பட்டியலிலும், கிறிஸ் கெய்லை (26 சிக்ஸ்கள்) பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.
ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியல்
1 – ரோகித் சர்மா – 28 (2023)
2 – கிறிஸ் கெய்ல் – 26 (2015)
3 – ஐயன் மார்கன் – 22 (2019)
3 – கிளென் மேக்ஸ்வெல் – 22 (2023)
4 – ஏபி டி வில்லியர்ஸ் – 21 (2015)
4 – குவின்டன் டி காக் – 21 (2023)
ரோகித் சர்மாவின் விக்கெட்டை தொடர்ந்து, தனது அதிரடியை தொடர்ந்த சுப்மன் கில், 8 ஃபோர், 6 சிக்ஸ்களுடன் 65 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்திருந்தபோது, மும்பையில் வீசும் வெப்ப அலையை சமாளிக்க முடியாமல் ஏற்பட்ட கடுமையான தசைப்பிடுப்பு காரணமாக, போட்டியில் இருந்து ஓய்வு பெற்று ஃபெவிலியன் திரும்பினார்.
மறுமுனையில், விராட் கோலி 45 ரன்களுடன் விளையாடி வரும் நிலையில், இந்தியா 25 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை சேர்த்துள்ளது. rohit sharma breaks Chris Gayle record
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…