ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி போட்டி, பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. rohit sharma achievements
இந்த போட்டி 2 சூப்பர் ஓவர்கள் வரை நீடிக்க, இந்திய அணி இறுதியில் த்ரில் வெற்றி பெற்று 3-0 என தொடரை கைப்பற்றியது.
இப்போட்டியில், முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி முதல் 5 ஓவர்களிலேயே 4 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில், அணியின் கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி சதம் விளாசி அசத்தினார்.
8 சிக்ஸ், 11 பவுண்டரியுடன் 69 பந்துகளில் ரோகித் சர்மா 121 ரன்களை குவித்தார். தனது இந்த அதிரடி ஆட்டத்தால், இப்போட்டியில் ரோகித் சர்மா பல சாதனைகளை அடித்து நொறுக்கியுள்ளார்.
முதலாவதாக, இந்த சதம் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் 5 சதங்களை குவித்துள்ள ரோகித் சர்மா, இந்த இலக்கை எட்டும் முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இவரை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் 4 சதங்களுடன் 2வது இடத்தில் உள்ளனர்.
இந்த வெற்றியுடன், இந்திய ஆடவர் அணியின் கேப்டனாக டி20 போட்டிகளில் 42 வெற்றிகளை பெற்றுள்ள ரோகித் சர்மா,
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற இந்திய கேப்டன் என்ற மகேந்திர சிங் தோனியின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.
மேலும், அதிக இரு தரப்பு டி20 தொடர்களை வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையையும் ரோகித் சர்மா தற்போது பெற்றுள்ளார். தற்போது வரை அவர் 12 தொடர்களை கேப்டனாக கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
A record-breaking evening in Bengaluru 👏👏
Skipper Rohit Sharma now has the most T20I wins as #TeamIndia Captain in Men's Cricket 🙌 #INDvAFG | @ImRo45 | @IDFCFIRSTBank pic.twitter.com/0fnShdlqE1
— BCCI (@BCCI) January 17, 2024
கேப்டனாக 3 டி20 சதங்களை விளாசியுள்ள ரோகித் சர்மா, இதன்மூலம், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமின் சாதனையை சமன் செய்துள்ளார்.
மேலும், இந்திய அணியின் கேப்டனாக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில், விராட் கோலியை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.
முன்னதாக, 1570 ரன்களுடன் விராட் கோலி முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது இந்த சதம் மூலம் 1648 ரன்களுடன் ரோகித் சர்மா அந்த இடத்தை பிடித்துள்ளார்.
மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் கேப்டனாக அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில், இயான் மார்கனை (86) பின்னுக்கு தள்ளி, தற்போது ரோகித் சர்மா (90) முதலிடம் பிடித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
AK 63 : ஆதிக் படத்தில் நடிக்க அஜித்துக்கு ரூ.165 கோடி?
’அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அரசியல்’ : நீதிமன்றம் செல்வாரா அபிசித்தர்?
rohit sharma achievements