உலகில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்… ரோகித் படைத்த புதிய சாதனை

Published On:

| By Kumaresan M

உலகில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

உலகில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் 294 இன்னிங்ஸ்களில் விளையாடி 331 சிக்ஸர்களுடன் வெஸ்ட் இண்டிஸ் வீரர் கிறிஸ் கெயில் இரண்டாவது இடத்தில் இருந்தார். நேற்று கட்டாக்கில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் கட் அட்டிங்ஸன் வீசிய இரண்டாவது ஓவரில் ஒரு சிக்ஸரை ரோகித் சர்மா அடித்தார்.

இது ஒரு நாள் போட்டியில் ரோகித் அடித்த 332 வது சிக்ஸர் ஆகும். இதனால், ஒரு நாள் போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த 2வது வீரர் என்ற பெருமை ரோகித்துக்கு கிடைத்துள்ளது.இதற்கு, 259 இன்னிங்ஸ் தேவைப்பட்டது. ரோகித் சர்மா இதுவரை 10, 866 ரன்களை அடித்துள்ளார். அதிகபட்சம் 264 ஆகும்.

இந்த பட்டியலில் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி 369 ஆட்டங்களில் விளையாடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். இலங்கை ஜாம்பவான் ஜெயசூர்யா 433 ஆட்டங்களில் விளையாடி 270 சிக்ஸர்களுடன் 4வது இடத்திலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 297 ஆட்டங்களில் 229 சிக்ஸர்கள் அடித்து 5வது இடத்திலும் உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share