இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பிறந்தநாளான இன்று (ஜூலை 7), ரோகித் சர்மாவை “மக்களின் கேப்டன்” என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இந்திய அணிக்காக 3 வகையான ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி தான். அதன்பின் டி20 உலகக்கோப்பையை ரோகித் சர்மா வென்றிருக்கிறார்.
இந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியதோடு, முக்கியமான போட்டிகளில் ரோகித் சர்மாவின் பேட்டிங் மிரட்டலாகவே அமைந்தது. 17 ஆண்டுகளுக்கு பின் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.
இதுகுறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், “டி20 உலகக்கோப்பையை கேப்டனாக வென்றதன் மூலமாக கபில் தேவ், தோனி உள்ளிட்ட ஜாம்பவான்கள் பட்டியலில் ரோகித் சர்மாவும் இணைந்துள்ளார்.
அவர்கள் இருவரையும் போலவே, ரோகித் சர்மாவும் மக்களின் கேப்டனாக கொண்டாடப்படுகிறார். ரோகித் சர்மாவை இந்திய அணி வீரர்கள் மட்டுமல்லாமல், இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் விரும்புகிறார்கள்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ரோகித் சர்மாவின் ஐகானிக் கேப்டன்சி ஸ்டைல் மற்றும் யுக்திகளை ரசிக்கிறார்கள். ஆட்டத்தின் போக்கை சரியான நேரத்தில் கணித்து திட்டங்களை உருவாக்குகிறார்.
இதன் காரணமாக ரோகித் சர்மாவின் கள முடிவுகள் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கிறது. அதேபோல் அந்த முடிவுகளால் ஆட்டத்தின் போக்கு மாறும் போது மக்கள் கொண்டாடுகிறார்கள்.
இந்திய அணிக்காக முன் நின்று போராடுவதோடு, சொந்த சாதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அணிக்கு தேவையானதை ரோகித் செய்கிறார். இதுபோன்ற கேப்டன்களை பெறுவதற்காக இந்தியா புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
அதேபோல் ராகுல் டிராவிட்டின் ரோல் மிக முக்கியமானது. ரோகித் மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் சரியான கூட்டணியாக உள்ளனர்” என்று சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி!
போயஸ்கார்டன் வீடு… இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால் வாங்கியிருக்க மாட்டேன்: நடிகர் தனுஷ்