ஐ.சி.சி. நடத்தும் அனைத்து ஃபார்மட் தொடர்களிலும் இறுதி ஆட்டத்துக்கு அணியை தகுதி பெற வைத்த கேப்டன் என்ற பெருமையை படைத்துள்ளார் ரோகித் சர்மா.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வரும் 9 ஆம் தேதி துபாயில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா சந்திக்கிறது. rohit new record as captain
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய அணியின் முழு நேர கேப்டனாக ரோகித் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டத்துக்கு இந்தியா முன்னேறியது. அதே ஆண்டில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்துக்கும் இந்திய அணி தகுதி பெற்றது.
பின்னர், 2024 ஆம் ஆண்டு நடந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக ஆடி கோப்பையை வென்றது. 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு, டி20 தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.. rohit new record as captain
அந்த வரிசையில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மட்டும்தான் எஞ்சியிருந்தது. தற்போது, இந்த தொடரின் இறுதி ஆட்டத்துக்கும் ரோகித் தலைமையிலான இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. ஆக, ஐசிசி நடத்தும் அனைத்து தொடர்களின் இறுதி ஆட்டத்துக்கும் இந்திய அணியை ரோகித் சர்மா வழி நடத்தி சென்றுள்ளார். இந்த சாதனையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் கங்குலி, தோனி கூட செய்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.