Rohit deserves it - Yuvraj Singh Talks

ரோஹித் தான் அதற்கு தகுதியானவர்: யுவராஜ் சிங் டாக்!

விளையாட்டு

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் சிறந்த கேப்டன் ரோஹித் சர்மா தான் என  யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் 2 உலகக்கோப்பை வெற்றிகளிலும் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் டி20 உலகக்கோப்பைக்கான தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து பேசி உள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் 2024 ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணியும் சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது.

15பேர் கொண்ட இந்த அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

2024 டி20 உலகக்கோப்பை தொடரின் விளம்பரத் தூதராக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் யுவராஜ் சிங்கை அறிவித்தது.  இந்திய அணிக்காக 2 உலகக்கோப்பை தொடர்களில் சிறப்பாக செயல்பட்டவர் யுவராஜ் சிங்.

தற்போதைய டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து யுவராஜ் சிங் பேசியதாவது, “ரோஹித் சர்மா இந்திய அணியில் இருப்பது மிகவும் முக்கியமானது. இந்திய அணிக்கு நல்ல கேப்டன் தேவை. அழுத்தமான சூழ்நிலைகளில் விவேகமான முடிவுகள் எடுக்கக்கூடிய கேப்டன் தேவை. அது ரோஹித் சர்மா தான்.

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை இறுதிப் போட்டிவரை அழைத்து சென்றது ரோஹித் சர்மா தான். ஐபிஎல் தொடர்களில் இதுவரை ரோஹித் கேப்டனாக 5 கோப்பைகளை வென்றுள்ளார்.

அவரைப்போன்ற ஒரு நல்ல கேப்டன் இந்திய அணிக்கு தேவை. ரோஹித் சர்மாவை உலகக்கோபையுடன் பார்க்க நான் மிகவும் ஆசைப்படுகிறேன். உலகக்கோப்பை பதக்கத்தை ரோஹித் அணிய வேண்டும். அதற்கு அவர் தகுதியானவர்.

பல வெற்றிகளை பெற்ற பின்னும் ரோஹித் சர்மா இன்னும் மாறவில்லை. அதுதான் ரோஹித் சர்மாவின் அழகு. எப்போதும் சக வீரர்களுடன் வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் நடந்து கொள்வார். ஆடுகளத்திலும் சிறந்த தலைவராக இருப்பார்.

கிரிக்கெட்டில் எனது மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர் ரோஹித் சர்மா” என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

3ஆம் கட்ட தேர்தல்: 3 மணி வரை 50.71 சதவீத வாக்குகள் பதிவு!

சிறையில் சவுக்கு சங்கர் மீது தாக்குதலா… விசாரணைக்கு உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0