WTC Final: கேப்டனை அவுட்டாக்கிய கேப்டன்!

விளையாட்டு

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தியா , ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று(ஜூன் 7) தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 469 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்மித் 121 ரன்களும் எடுத்தனர்.

அலெக்ஸ் கேரி 48 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்தியா அணி சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஷமி, ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

இந்நிலையில், ரோகித் சர்மா 26 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தபோது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்தில் எல்பிடபுள்யூ முறையில் விக்கெட்டை பறிகெடுத்தார் சுப்மான் கில் 13 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

தேநீர் இடைவேளை வரை இந்தியா 2 விக்கெட்டுக்கு 37 ரன்களை எடுத்துள்ளது. புஜாரா 3 ரன்னும், விராட் கோலி 4 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ், போலண்ட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

இப்படி பண்ணிட்டியேப்பா…ட்ரோலுக்கு ஆளான பாகிஸ்தான் வீரர்!

5 லட்சம் மரங்கள்: வேலு அறிவிப்பை செயல்படுத்திய ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *