ஐபிஎல் 2024 தொடரின் 9ஆவது லீக் போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் இன்று (மார்ச் 28) நடந்து வருகிறது. இதில், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆரம்பத்தில் தடுமாறியது.
அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான ஜெய்ஸ்வால் (5), பட்லர்(11) மற்றும் கேப்டன் சாம்சன்(15) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர்.
எனினும் 4வது விக்கெட்டுக்கு ரியான் பராக்குடன் ஜோடி சேர்ந்தார் அஸ்வின். இருவரும் அணியை மீட்கும் முயற்சியில் நிதானமாக விளையாடினர். riyan parag aggressive batting
இதனால் முதல் 10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 57 ரன்களை மட்டுமே அடித்திருந்தது.
எனினும் அடுத்த 10 ஓவரில் எழுச்சி கண்டது. 3 சிக்ஸர்களை பறக்கவிட்ட அஸ்வின் 29 ரன்களுடனும், 3 பவுண்டரிகளை விரட்டிய துருவ் ஜூரல் 20 ரன்களுடனும் வெளியேறினர்.
மறுபுறத்தில் நிலையாக நின்று ஆடிய ரியான் பராக் டெல்லி அணி பந்துவீச்சாளர்களை ருத்ரதாண்டவம் ஆடினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய அவர் 7 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 84 ரன்கள் குவித்தார்.
https://twitter.com/thebharatarmy/status/1773378346027540679
தனது முதல் 26 பந்துகளில் 26 ரன்களை மட்டுமே அடித்திருந்த பராக், அடுத்த 18 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்துள்ளது.
டெல்லி அணி தரப்பில் ஓவர் வீசிய 5 பந்துவீச்சாளர்களும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங் செய்ய தற்போது களமிறங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”முத்திரைத் தாளுக்கு வித்தியாசம் தெரியாதவர் ஐபிஎஸ் ஆ?” : திமுக எம்.பி விமர்சனம்!
சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை : அமைச்சர் ஐ பெரியசாமி கோரிக்கை நிராகரிப்பு!
riyan parag aggressive batting