ஐபிஎல் 2024 போட்டியில் விளையாட ரிஷப் பண்ட் முழு உடல் தகுதி பெற்றுவிட்டார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று (மார்ச் 12) அறிவித்துள்ளது. Rishabh Pant on the IPL 2024
கடந்த 2022 டிசம்பரில் நடந்த கார் விபத்தில் சிக்கி இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் பலத்த காயமடைந்தார்.
தொடர்ந்து அவருக்கு முழங்காலில் அறுவைசிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவர் ஓய்வெடுத்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக உள்ளூர் கிரிக்கெட்டிலும் அவ்வபோது விளையாடி வந்தார்.
பின்னர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு (NCA) இந்திய அணிக்கு தகுதி பெறும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்,
இந்த நிலையில், முழு உடற்தகுதியுடன் ரிஷப் பண்ட் தகுதி பெற்றுவிட்டதாகவும், அவர் இந்த மாதம் தொடங்க உள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாட உள்ளதாகவும் பிசிசிஐ அனுமதி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“உயிருக்கு ஆபத்தான சாலை விபத்தைத் தொடர்ந்து, கடந்த 14 மாதமாக மறுவாழ்வு சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட், வரவிருக்கும் ஐபிஎல் 2024 தொடரில் ஒரு விக்கெட் கீப்பர் – பேட்டராக விளையாட இப்போது தகுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளது.
இதனையடுத்து வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ரிஷப் பண்ட் களமிறங்க உள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா,
“ரிஷப் பண்ட் தற்போது நன்றாக பேட்டிங் மற்றும் கீப்பிங் செய்கிறார். அவர் வரும் ஜுன் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் விளையாடினால், அது இந்திய அணிக்கு பெரிய விஷயமாக இருக்கும்.
அவர் எங்களுக்கு பெரிய சொத்து. அதற்கு முன்னதாக ஐபிஎல்லில் அவர் எப்படி விளையாடுகிறார் என்பதைப் பார்ப்போம்” என்று ஜெய் ஷா அறிவித்துள்ளார்.
இதற்கிடையே காயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று வரும் வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி (வலது குதிகால் அறுவை சிகிச்சை) மற்றும் பிரசித் கிருஷ்ணா (தசைநார் அறுவை சிகிச்சை) இந்த சீசனில் பங்கேற்க முடியாது என்பதையும் பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சி.ஏ.ஏ.வை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம்: ஸ்டாலின் அறிவிப்பு!
சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தது ஏன்? – சரத்குமார் பேட்டி!
Rishabh Pant on the IPL 2024