டெல்லியில் தலயை பார்த்தாச்சு… சென்னையில் மஞ்சள் சட்டை ரெடியாச்சு!

விளையாட்டு

டெல்லி அணியின் தக்கவைக்கப்படும் வீரர்கள் பட்டியலில் கேப்டன் ரிஷப் பண்ட் இல்லாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் டெல்லி அணிக்காக விளையாடி வந்த ரிஷப் பண்ட், 2021ஆம் ஆண்டு ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகிய போது, புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

மெகா ஏலத்துக்கு முன், பிசிசிஐ தரப்பில் ரீடென்ஷன் செய்வதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்ட பின், கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் டெல்லி அணியின் உரிமையாளர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி அணியை நிர்வகித்து வரும் ஜிஎம்ஆர் , ஜேஎஸ்டபிள்யூ நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் தான் பிரச்னைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இரு நிறுவனங்களுக்கும் டெல்லி அணியை  ஒவ்வொரு 2 ஆண்டுக்கும் ஒருமுறை நிர்வகித்து வருகின்றன. எனினும், டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் தொடர வேண்டும் என்று இரு நிறுவனங்களுமே விரும்பியுள்ளன. ரிஷப் பண்ட் கேட்கும் தொகையை வழங்கவும் இரு தரப்பும் முன் வந்துள்ளது.

அப்போது, டெல்லி அணியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரமும் தனக்கு  வேண்டும் என்று ரிஷப் பண்ட் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்கு இரு தரப்பு உரிமையாளர்களும் ஒப்புக் கொண்ட பிறகு, எந்த முடிவிலும் ரிஷப் பண்ட்டின் ஆலோசனையோ, கருத்தோ கேட்கப்படவில்லை .

இதனால் ரிஷப் பண்ட்  தனக்கு மரியாதை இல்லை என்று கருதியுள்ளார்.  இதன் காரணமாகவே ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து விலகிட உறுதியாக இருந்துள்ளார்.  அதோடு, 2 ஆண்டுகளுக்கு நிர்வாகம் மாற்றப்படுவதையும் ரிஷப் பண்ட் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, பல்வேறு அணி நிர்வாகங்களும் அவரை அணுகியுள்ளன.

அதனால், மெகா ஏலத்தில் பங்கேற்கவே விருப்பம் தெரிவித்திருக்கிறார்.  ரிஷப் பண்டை பஞ்சாப் அல்லது சிஎஸ்கே அணிகள் வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.  ஆனால், சென்னை அணியும் எப்பாடு பட்டாவாது ரிசப் பண்டை வாங்க திட்டமிட்டுள்ளது.

தோனி ஓய்வுக்கு பிறகு, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்கிற ரீதியில் பண்டை விட்டு விடக் கூடாது என்பதில் சென்னை அணி தீவிரம் காட்டி வருகிறது.  ஏற்கனவே, தோனியை ரிஷப் பண்ட் சந்தித்து பேசி விட்டதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் சுரேஷ் ரெய்னா ஜியோ சினிமாவுக்கு அளித்த பேட்டியில்,  ஒரு முறை தான் டெல்லியில் தோனியை சந்திக்க சென்றேன். அப்போது, அங்கே ரிஷப் பண்டும் இருந்தார் என்று கூறியதும் கவனத்தில் கொள்ளத் தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

வெங்காய வெடியால் சிதறிய உடல்… டெட்டனேட்டருக்கு சமமாம்!

ஒரு வழியாக குறைந்த தங்கம் விலை… இன்று சவரன் எவ்ளோ?

+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *