மைதானத்தில் கிண்டல் செய்த ரசிகர்: ரிஷப் பந்த் பதிலடி!

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தை நடிகையின் பெயரை பயன்படுத்தி கிண்டல் செய்த ரசிகருக்கு ரிஷப் பந்த் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தும் தானும் காதலிப்பதாக நடிகை ஊர்வசி ரவுடேலா மறைமுகமாகத் தெரிவித்திருந்தார். இதற்கு ரிஷப் பந்த் மறுப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் ஊர்வசியை பிளாக் செய்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

இவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் மோதலும் இது குறித்த செய்திகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

கிண்டல் செய்த ரசிகர்

இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர் 12 சுற்று இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தின்போது மைதானத்தில் பவுண்டரி அருகே சென்று கொண்டிருந்த ரிஷப் பந்த்தை இந்திய ரசிகர் ஒருவர் “அண்ணா ஊர்வசி கூப்டுறாங்க” எனச் சத்தமாக கத்தினார்.

இதற்கு ரிஷப் பந்த் உடனடியாக “அப்ப போய் என்னன்னு கேளு” என்று பதிலளித்துவிட்டு நிற்காமல் முன்னோக்கிச் சென்றார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

மேலும், கிரிக்கெட் வீரரிடம் ரசிகர் ஒருவர் இப்படி அநாகரிகமாக நடந்து கொண்டதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

புகார் அளிக்க வேண்டும்

ரசிகர்கள் சிலர் “ரிஷப் பந்த் இவர்கள் மீது புகார் அளித்திருக்க வேண்டும் மற்றும் அபராதம் விதித்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

“அவர் புகார் அளிக்கவில்லை என்றால் இதுபோன்ற நிகழ்வுகள் தொடரும்”, “இது வெறுக்கத்தக்கது.

அவரது தனிப்பட்ட வாழ்க்கைக்குக் கொஞ்சம் மரியாதை கொடுங்கள். நீங்கள் அவரது கிரிக்கெட்டை ட்ரோல் செய்யுங்கள்” என்று இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

வேடிக்கையாக உள்ளது

நடிகை ஊர்வசி ஹங்காமா சேனலுக்கு அளித்திருந்த ஒரு பேட்டியில், ”ரிஷப் பந்த் டெல்லியில் ஒரு நிகழ்ச்சியின் போது தன்னை சந்திக்க காத்திருந்தார். ஆனால் நான் தூங்கிவிட்டதால் சந்திப்பு நடைபெறவில்லை.

நான் தூக்கத்திலிருந்து எழுந்து பார்க்கும் போது 17 மிஸ்டு கால் இருந்தது” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு ரிஷப் பந்த் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “சில அற்ப பிரபலங்களுக்காகவும், தலைப்புச் செய்திகளில் இடம்பிடிப்பதற்காகவும் நேர்காணல்களில் மக்கள் எப்படிப் பொய் சொல்கிறார்கள் என்பது வேடிக்கையாக உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவினை ரிஷப் பந்த் சிறிது நேரத்தில் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோனிஷா

பிரியாணி சண்டை : கணவரும் உயிரிழப்பு!

ஆளுநரை திரும்ப பெற குடியரசுத் தலைவரிடம் மனு!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *