கேஸ் சிலிண்டர் விநியோகிக்கும் தந்தை… சொந்த ஊரில் 3.5 கோடிக்கு பங்களா வாங்கிய ரிங்குசிங்

விளையாட்டு

கேகேஆர் அணியால் ரீடெய்ன் செய்யப்பட்ட சில வாரங்களிலேயே நட்சத்திர வீரர் ரிங்கு சிங் சொந்த ஊரான அலிகாரில் பங்களா ஒன்றை வாங்கி குடிபெயர்ந்துள்ளார்.

சமீபத்தில் கேகேஆர் அணி சார்பாக முதல் வீரராக ரூ.13 கோடிக்கு ரிங்கு சிங் தக்க வைக்கப்பட்டிருந்தார்.  அடுத்த சீசனில் கேகேஆர் அணியின் புதிய கேப்டனாக ரிங்கு சிங் பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. கேகேஆர் அணியிடம் இருந்து ரூ.13 கோடி ஒப்பந்தம் கிடைத்த சில தினங்களிலேயே ரிங்கு சிங் தனது சொந்த ஊரில் பிரம்மாண்ட பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள கோல்டன் எஸ்டேட் ஓசோன் பகுதியில்  ஒரு பங்களாவை தான் ரிங்கு சிங் வாங்கியுள்ளார்.

தொடர்ந்து ரிங்கு சிங்  அந்த பங்களாவிற்கு தனது குடும்பத்தினருடன் குடிபெயர்ந்தும் விட்டார். கடந்த ஐபிஎல் சீசன் வரை ரிங்கு சிங்கின் ஊதியமாக ரூ.55 லட்சம் மட்டுமே இருந்து வந்தது.  குஜராத் அணிக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை விளாச ஒரே நாளில் கொல்கத்தா அணியின் முன்னணி வீரராக மாறி விட்டார்.

புதிய பங்களாவின் புகைப்படங்களை ரிங்கு சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். ரிங்கு சிங் இந்திய அணிக்காக விளையாடி வருகிற போதும், அவரின் தந்தை கான்சாந்த் சிங் தொடர்ந்து கேஸ்  சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியை  மேற்கொண்டு வருகிறார். அதேபோல் ரிங்குசிங்கின் சகோதரர் ஆட்டோ – ரிக்‌ஷா ஓட்டி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

தங்கம் விலை மீண்டும் உயர்வு: சவரன் எவ்வளவு தெரியுமா?

தடையை மீறி பேரணி: பாய்ந்த வழக்கு… ஆளுநரை சந்திக்கும் கிருஷ்ணசாமி

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *