IPL 2024: எதுவுமே பண்ணல ‘ஆட்டம்’ ஓவரா இருக்கு… வான்டடாக வம்பிழுத்த கம்பீர்

விளையாட்டு

கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பீர் மீண்டும் ஒருமுறை விராட் கோலியை வம்பிழுத்து இருக்கிறார்.

இன்று இரவு (மார்ச் 29) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பெங்களூரின் சின்னச்சாமி மைதானத்தில் மோதுகின்றன.

கடந்த 2௦15-ம் ஆண்டில் இருந்து பெங்களூரு அணி கொல்கத்தா அணியை சின்னச்சாமி மைதானத்தில் வென்றதில்லை. இதனால் 8 வருட அவமானத்தை பெங்களூரு அணி துடைத்தெறியுமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

சொல்லப்போனால் ஐபிஎல் தொடரின் உண்மையான மோதல் இன்று தான் என பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் கொல்கத்தா அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

அதில், ” கிரிக்கெட் ஜாம்பவான்கள் என கூறப்படும் கிறிஸ் கெயில், ஏபி டிவிலியர்ஸ், விராட் கோலியை வைத்துக்கொண்டே பெங்களூரு அணி இதுவரை எதையும் சாதிக்கவில்லை.

பெங்களூரு அணியின் சொந்த மைதானமான சின்னச்சாமியில், நாங்கள் மீண்டும் ஒருமுறை கோலியின் பெங்களூரு அணியை வீழ்த்துவோம்.

பெங்களூரு அணி இதுவரை எதையும் வெல்லவில்லை. ஆனால் அனைத்தையும் வென்றதை போல அவர்களின் நடவடிக்கைகள் உள்ளன.

நான் அவர்களையும் அவர்களின் இந்த எண்ணத்தையும் மீண்டும் ஒருமுறை வீழ்த்த வேண்டும் என நினைக்கிறேன்”, என பகிரங்கமாக தெரிவித்து இருக்கிறார்.

இதற்கு ஏற்றதுபோல பயிற்சியின் போது கோலி, கம்பீர் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்துக் கொள்வது போல வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

எனவே இன்றைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆட்டத்தில் அனல் பறக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரூ.11 கோடி வரிபாக்கி : சிபிஐ கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

’அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு’ : ராகுல் காந்தி வாக்குறுதி!

தேர்தல் பணிக்கு வராத 1,500 ஊழியர்களுக்கு நோட்டீஸ்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *