ராவல்பிண்டி மைதானம்: அபாய நிலைக்கு தள்ளிய ஐசிசி

விளையாட்டு

பாகிஸ்தானின் ராவல்பிண்டி ஆடுகளம் ஐசிசியால் அபராதப் புள்ளிகளைப் பெற்று, அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் மிகவும் புகழ்பெற்ற கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று, ராவல் பிண்டி. இந்த மைதானம் 1992ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 15 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து கண்டு களிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ராவல் பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி 1993ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கியது.

ராவல்பிண்டி மைதான சாதனைகள்

ஒருநாள் போட்டி 1992ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி தொடங்கியது. டி20 போட்டி 2020ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி தொடங்கியது. இந்த மைதானத்தில் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளும், 24 ஒருநாள் போட்டிகளும் நடைபெற்றுள்ளன. டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 657 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 139 ரன்கள் பதிவாகியுள்ளது.

rawalpindi stadium icc appraisal

ஒருநாள் போட்டியில் 329 ரன்கள் எடுக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சமாக 104 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. இங்கு நடைபெற்ற போட்டிகளில் பாகிஸ்தானே அதிகமுறை வெற்றி பெற்றிருக்கிறது. முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் சோயிப் அக்தர், அப்ரிடி, வாக்கார் யூனிஸ் போன்றோர் இந்த மைதானத்தில் சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளனர்.

இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாக்கார் யூனிஸ் எடுத்துள்ளார். அவர், 11 விக்கெட்கள் எடுத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் சோகிப் அக்தர் உள்ளார். அவர் 10 விக்கெட்கள் எடுத்துள்ளார். இங்கு அதிக முறை சாகசம் நிகழ்த்திய சோயிப் அக்தர், அந்த மைதானத்தின் பெயராலேயே ’ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ்’ என அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோல், பேட்டிங்கிலும் இங்கு நிறைய சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்தியாவின் ரன் மெஷின் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இந்த மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 141 ரன்கள் எடுத்துள்ளார். இங்கு அதிகம் ரன் சேர்த்த வீரர் கேரி கிறிஸ்டன். தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த இவர், 1996ஆம் ஆண்டு யூ.ஏ.இ.க்கு எதிராக ஆட்டமிழக்காமல் 188 ரன்கள் எடுத்திருந்தார்.

பிரச்சினை ஆரம்பம்

இப்படி எண்ணற்ற சாதனைகளைக் கொண்டிருக்கும் ராவல் பிண்டி மைதானத்துக்கு சோதனைக்காலம் ஆரம்பித்துவிட்டது என்றே சொல்லலாம். ஆம், சமீபத்தில் பாகிஸ்தான் – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியால்தான் இந்த பிரச்சினை கிளம்பியிருக்கிறது.

rawalpindi stadium icc appraisal

அங்கு கடந்த டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 101 ஓவர்களில் 657 ரன்கள் எடுத்தது. இதில் 4 பேர் சதம் அடித்தனர்.

அதுபோல், பாகிஸ்தான் அணி 155.3 ஓவர்களில் 579 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் 3 பேர் சதமடித்தனர். இந்த நிலையில், இப்போட்டி, டிரா ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது.

ஐசிசி அளித்த மதிப்பீடு

இதையடுத்து, பேட்டிங்குக்குச் சாதகமாக இருந்ததால் ராவல்பிண்டி ஆடுகளம் அதிக விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்நிலையில் இந்த ஆடுகளத்துக்குச் சராசரிக்கும் கீழே என மதிப்பீடு செய்துள்ளது ஐசிசி. ராவல்பிண்டி ஆடுகளம் இதுபோன்ற மதிப்பீட்டைப் பெறுவது 2வது முறை.

கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவும் மோதிய டெஸ்டில் 1,187 ரன்கள் குவிக்கப்பட்டன. 5 நாள்களில் 14 விக்கெட்டுகள் மட்டுமே கிடைத்தன. அந்த ஆடுகளமும் சராசரிக்கும் கீழே என்கிற மதிப்பீட்டைப் பெற்றது.

இந்த ஆடுகளம் எந்தப் பந்துவீச்சாளருக்கும் உதவவில்லை. இதனால் தான் இரு அணி பேட்டர்களும் விரைவாக ரன்கள் எடுத்தார்கள். நாள் செல்லச் செல்ல பந்துவீச்சுக்குச் சாதகமாக ஆடுகளம் மாறவில்லை. இதனால் தான் இந்த மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது என ஐசிசி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் தெரிவித்துள்ளார்.

rawalpindi stadium icc appraisal

அவர் மட்டுமல்ல, இன்னும் பலரும் அம்மைதானத்தைக் குற்றஞ்சாட்டியுள்ளனர். இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், “இது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச்சா” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி, “பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு, ஒரு நல்ல டெஸ்ட் போட்டிக்கான பிட்சை தயார் செய்ய ஒளி ஆண்டுகள் (ஓர் ஆண்டு என்பது 365 நாட்களை கொண்டது ஆகும். அதில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம் கொண்டது ஆகும், ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்களை கொண்டது ஆகும், ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகளை கொண்டது ஆகும்.

ஆகவே, ஓர் ஆண்டில் உள்ள மொத்த வினாடிகளின் எண்ணிக்கை: =365×24×60×60 =3.153×107 வினாடிகள் ஆகும். ஒளியானது ஒரு வினாடியில் 3×108 மீ தொலைவைக் கடக்கும் எனில், ஓர் ஆண்டில் ஒளி கடக்கும் தொலைவு3×108×3.153×107=9.46×1015 மீட்டர் தொலைவே ஓர் ஒளி ஆண்டு எனப்படும். ஒரு ஒளியாண்டு=9.46×1015 மீ.) என விமர்சித்துள்ளார்.

இந்த நிலையில்தான் ஐசிசியால் ராவல்பிண்டி ஆடுகளம் இரு அபராதப் புள்ளிகளைப் பெற்றுள்ளது. மேலும் கூடுதல் அபராதப் புள்ளிகளை அம்மைதானம் இனிமேல் பெறுமானால், சர்வதேச ஆட்டங்களை நடத்த தடை விதிக்கப்படும் அபாயத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.

ஒரு கிரிக்கெட் மைதானம் 5 வருடங்களுக்குள் 5 அபராதப் புள்ளிகளைப் பெற்றால் ஒரு வருடத்துக்கு எவ்வித சர்வதேச ஆட்டத்தையும் நடத்த தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ.பிரகாஷ்

அய்யங்காருக்கு அரசுப் பதவி! ஸ்டாலின் செலக்‌ஷன் பற்றி அமைச்சர் சேகர்பாபு

மோடி குறித்து சர்ச்சை பேச்சு: கைது செய்யப்பட்ட காங்கிரஸ் நிர்வாகி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *