இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஜெர்ஸி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளதாக ரசிகர்கள் கருத தொடங்கியுள்ளனர்.
ரவீந்திர ஜடேஜா அந்தப் பதிவில் வேறு எந்த விவரமும் தெரிவிக்கவில்லை. தனது டெஸ்ட் அணி ஜெர்சி புகைப்படத்தை மட்டும் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அவர் ஓய்வு முடிவை எடுத்துள்ளாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. நடப்பாண்டில் இந்திய அணி சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.
முன்னதாக ஜனவரி மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அந்த இரண்டு ஒருநாள் தொடர்களுக்கான அணிகளிலும் ரவீந்திர ஜடேஜாவுக்கு இடம் கிடைக்குமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
டெஸ்ட் போட்டி ஜெர்ஸி புகைப்படத்தை மட்டும் வெளியிட்டு இருக்கும் நிலையில், அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து மட்டும் ஓய்வு பெறப் போகிறாரா? அல்லது அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற போகிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே, ஜடேஜா 2024 ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருடன் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-1 என்ற புள்ளி கணக்கில் தோற்றது. கேப்டன் ரோகித் , விராட் கோலி ஆகியோர் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.
இந்த தொடரில் 3 போட்டியில் விளையாடிய ஜடேஜா 4 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். 135 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால், ஜடேஜாவும் விமர்சிக்கப்பட்டார். எனவே, அணியில் இருந்து ஜடேஜாவை கழற்றி விடும் முடிவில் பிசிசிஐ இருப்பதாகவும் தெரிகிறது. ஜடேஜா வெளியிட்ட பதிவில் ஹேப்பி ரிட்டையர்மென்ட் என்று வாழ்த்து கூறியுள்ளனர். ஜடேஜாவுக்கு தற்போது 36 வயதாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
“இந்தப் பஞ்ச் டயலாகுலாம் இங்க எடுபடாது” : விஜய்க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!