Asia Cup: வரலாற்று சாதனை படைத்த ஜடேஜா

Published On:

| By christopher

ஆசியக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இர்பான் பதானின் சாதனையை ரவீந்திர ஜடேஜா தற்போது முறியடித்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடந்து வரும் ஆசியக்கோப்பை ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.

கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நேற்று (செப்டம்பர் 12) இலங்கை அணியை எதிர்கொண்ட இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.

இதில் 10 ஓவர்கள் வீசிய சுழற்பந்துவீச்சாளர் ஜடேஜா 33 ரன்களை விட்டுக்கொடுத்து கேப்டன் சனகா மற்றும் டி  சில்வா ஆகியோரின் விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதன்மூலம் ஆசியக் கோப்பை போட்டி வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணி வீரர் என்ற இர்பான் பதானின் சாதனையை ஜடேஜா முறியடித்தார்.

ஆசியக்கோப்பை தொடரில் கடந்த 2004 முதல் 2012 வரை 12 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவுக்காக சாதனை படைத்திருந்தார் பதான்.

அதனை முறியடிக்கும் விதமாக 17 இன்னிங்ஸ்களில் 24 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார் ஜடேஜா.

இந்த சாதனைப் பட்டியலில் இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 24 இன்னிங்ஸில் 30 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

ஆசிய கோப்பை (ODI) வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியல்:

  1. முத்தையா முரளிதரன் – 24 இன்னிங்ஸில் 30 விக்கெட்டுகள்
  2. லசித் மலிங்கா – 14 இன்னிங்ஸ்களில் 29 விக்கெட்டுகள்
  3. அஜந்தா மெண்டிஸ் – 8 இன்னிங்ஸ்களில் 26 விக்கெட்டுகள்
  4. சயீத் அஜ்மல் – 12 இன்னிங்ஸ்களில் 25 விக்கெட்டுகள்
  5. ரவீந்திர ஜடேஜா – 17 இன்னிங்ஸ்களில் 24 விக்கெட்டுகள்
  6. சமிந்த வாஸ் – 19 இன்னிங்ஸ்களில் 23 விக்கெட்டுகள்
  7. இர்பான் பதான் – 12 இன்னிங்சில் 22 விக்கெட்டுகள்

இந்திய அணிக்கு இந்த தொடரில் இன்னும் 2 ஆட்டங்கள் மீதம் உள்ள நிலையில், ஜடேஜா மேலும் சில விக்கெட்டுகள் வீழ்த்தும் பட்சத்தில் பட்டியலில் அவர் டாப் 3 வீரர்கள் பட்டியலில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

Asia Cup: பைனலில் இந்திய அணியுடன் மோதப்போவது யார்?

Asia Cup: இலங்கைக்கு எதிராக அபார வெற்றி.. பைனலுக்கு முன்னேறிய ‘இந்தியா’

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share