ravichandran ashwin csk ipl
2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், பிரமாண்டமாக துவங்கவுள்ளது.
முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதிக்கொள்ள உள்ளன.
அண்மையில் நிறைவு பெற்ற 2024 மகளிர் பிரீமியர் லீக் தொடரில், ஆர்சிபி மகளிர் அணி அபாரமாக விளையாடி முதல் முறையாக கோப்பையை வென்றது.
இனி விளையாடிக் கொண்டே வேலை தேடலாம்!
இதனால், ஆர்சிபி ஆடவர் அணியும் இந்த தொடரை வெற்றியுடன் துவங்கி கோப்பையை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் மார்ச் 18 அன்று ஆன்லைனில் விற்பனைக்கு வந்தது. ரூ.1,700 என்ற ஆரம்ப விலையுடன், பேடிஎம் இன்சைடர் செயலியில் இந்த டிக்கெட் விற்பனை நடைபெற்றது.
Unreal ticket demand for the #CSKvRCB #IPL2024 opener at Chepauk.
My kids want to the see opening ceremony and the game.@ChennaiIPL pls help🥳— Ashwin 🇮🇳 (@ashwinravi99) March 18, 2024
ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட்டுகளை வாங்கினர். இதனால், விற்பனை துவங்கிய சில நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன.
இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரும், முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட்டக்காரருமான அஸ்வின், சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கு ஒரு முக்கிய கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
தனது மகள்களுக்கு, சிஎஸ்கே vs ஆர்சிபி போட்டியை காண டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்பதே, அந்த கோரிக்கை.
இது குறித்து அஸ்வின் தன்னுடைய எக்ஸ் தளத்தில், “என்னுடைய மகள்கள் 2024 ஐபிஎல் துவக்க விழா மற்றும் சிஎஸ்கே vs ஆர்சிபி போட்டியை காண விரும்புகிறார்கள்”, என சென்னை அணியை டேக் செய்து, கோரிக்கை வைத்துள்ளார்.
IPL 2024: இதுக்கு பருத்திமூட்டை ‘குடோன்லேயே’ இருந்துருக்கலாம்… கிண்டலடிக்கும் ரசிகர்கள்!
முன்னதாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்த அஸ்வினுக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
அந்த பாராட்டு விழாவில், தான் தோனிக்கு வாழ்க்கை முழுவதும் கடமைப்பட்டிருப்பதாக அஸ்வின் பேசியிருந்தார்.
2008 ஆம் ஆண்டு ஐபிஎல் அறிமுகம் செய்யப்பட்டபோது, தான் எப்படி சென்னை அணியில் தேர்வு செய்யப்பட்டேன் என்பது குறித்து அஸ்வின் பேசினார்.
குறிப்பாக 2011 ஐபிஎல் தொடரில், தோனி தன் மீது வைத்த நம்பிக்கை, தன்னை இதுவரை அழைத்து வந்துள்ளது என்று அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
அப்போது, “தோனி எனக்கு கொடுத்த வாய்ப்பிற்கு, நான் அவருக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன்”, என அஸ்வின் உருக்கமாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
–மகிழ்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்யசபா சீட்டு எங்கே? கையெழுத்து போட மறுத்த ராமதாஸ்..தனி அறைக்கு அழைத்துச் சென்ற அண்ணாமலை
Manjummel Boys: செய்த சம்பவம்… புதிய வரலாறு படைத்தது!
“சொந்த மக்களுக்குத் துரோகம்” : பாஜக -பாமக கூட்டணி குறித்து திருமா பேட்டி!