கபில் தேவாக மாறிய பாண்டியா – ரவி சாஸ்திரி

விளையாட்டு

இந்திய அணியின் டி20 கிரிக்கெட் கேப்டன் பாண்டியா, கபில் தேவ் போல சிறப்பாக விளையாடுகிறார் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ravi shastri on hardik pandya as india skipper

இந்தநிலையில், நியூசிலாந்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஷிகர் தவான் கேப்டனாகவும் உள்ளனர்.

விராட் கோலி, ரோகித் ஷர்மா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் கேப்டனாக இருப்பதன் தாக்கம் குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறும்போது, “சுவாரஸ்யமும் உற்சாகமும் பாண்டியாவிடம் உள்ளது.

அது அணியில் உள்ள மற்ற வீரர்களிடமும் பிரதிபலிக்கும். மேலும் அவர்களை ஊக்குவிக்கும்.

ravi shastri on hardik pandya as india skipper

இந்திய அணியில் ஆல் ரவுண்டராக கபில் தேவ் இருந்தார். அவரைப்போல, பாண்டியா ஆடுவதால், டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஹர்திக் இந்திய அணியை வழிநடத்துவதைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ் லட்சுமணன் ஹர்திக் பாண்டியா கேப்டன் குறித்து, “அவர் ஒரு அற்புதமான எளிதில் அணுகக்கூடிய ஒரு கிரிக்கெட் வீரர். இந்திய அணி வீரர்கள் அவரை நம்புகிறார்கள். இந்திய அணியை அவர் முன்மாதிரியாக வழிநடத்துவார்.” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

2 படங்களில் நடித்தால் கலைமாமணி விருதா? – உயர்நீதிமன்றம் கேள்வி!

சசிகலா, தினகரன் எடப்பாடியை சந்திக்க வேண்டும்: செல்லூர் ராஜூ அழைப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0