இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தொடர்ச்சியாக காயம் ஏற்படுவது அணியின் மற்ற வீரர்கள் மற்றும் பிசிசிஐ தலைவர்களை பாதிக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசன் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தொடர்ந்து காயம் ஏற்பட்டு வருகிறது.
தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா போன்ற சில நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்திலிருந்து குணமடைய போராடி வருகின்றனர்.

இந்தநிலையில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடிக்கடி காயங்கள் ஏற்படுவது பிசிசிஐ மற்றும் அணி உரிமையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இஎஸ்பிஎன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ச்சியாக காயமடைந்து வருகின்றனர்.
அவர்கள் மீண்டும் விளையாட திரும்புவதற்கு முன்பாக தங்களது உடல் தகுதியை ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உங்களது கடுமையான காயத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. சில வீரர்கள் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் கூட விளையாட முடியாத சூழல் உள்ளது. இது சரியானது அல்ல.
காயமடைந்த வீரர்களால் அவர்களது அணி வீரர்களுக்கு மட்டுமல்ல பிசிசிஐ தலைவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
“இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது” : ஓபிஎஸ் வழக்கில் நீதிமன்றம்!
ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!