ravi bishnoi creating history
அண்மையில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி 4-1 என கைப்பற்றியது.
இந்த தொடரில் துவக்கத்தில் இருந்தே, பந்துவீச்சில் சிறப்பாக இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றிய ரவி பிஸ்னோய், விளையாடிய 5 போட்டிகளில் 9 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
இதன் காரணமாக, இந்த தொடருக்கான ‘தொடர் நாயகன்’ விருதையும் அவர் தட்டிச்சென்றார்.
அதுமட்டுமின்றி, ஒரு டி20 தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில், 9 விக்கெட்களுடன் முதலிடத்தில் இருந்த ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனையையும் ரவி பிஸ்னோய் சமன் செய்தார்.
இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக, ஐசிசியின் டி20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 5வது இடத்தில் இருந்த ரவி பிஸ்னோய், தற்போது முதலிடத்திற்கு முன்னேறி புதிய சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2022 பிப்ரவரியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில், இந்திய அணிக்காக அறிமுகமான 23 வயதேயான ரவி பிஸ்னோய், இதுவரை விளையாடிய 21 போட்டிகளில் 34 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரை தொடர்ந்து, இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு விளையாடிய 5 போட்டிகளில் 6 விக்கெட்களை கைப்பற்றிய அக்சர் பட்டேல், பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 7 இடங்கள் முன்னேறி 11வது இடத்தை பிடித்துள்ளார்.
மறுமுனையில், இந்த தொடர் முழுவதும் பேட்டிங்கில் அசத்தி ஒரு சதம் உட்பட 223 ரன்களை குவித்த ருதுராஜ் கெய்க்வாத்,
அதிரடியாக ஐசிசியின் டி20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் டாப் 10-க்குள் நுழைந்துள்ளார், தற்போது அவர் 7வது இடத்தில் உள்ளார்.
இந்திய அணியை வழிநடத்தி, பேட்டிங்கிலும் முக்கிய பங்குவகித்த சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் நீடிக்கிறார்.
இவர்களுடன், மற்றொரு இளம் இந்திய வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 16 இடங்கள் முன்னேறி 19வது இடம் பிடித்துள்ளார்.
அதேபோல, டி20 போட்டிகளுக்கான ஆல்-ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஹர்திக் பாண்டியா 3வது இடத்திலும், முன்னேற்றம் பெற்றுள்ள அக்சர் பட்டேல், தற்போது 14வது இடத்திலும் உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மகிழ்
கவின் நடிக்கும் “ஸ்டார்” படத்தின் ரிலீஸ் தேதி இதோ!
ravi bishnoi creating history