Ratan Tata denied Rs 10 Crore Reward to Rashid Khan

ஆப்கான் வீரர் ரஷீத் கானுக்கு ரூ.10 கோடி நிதியுதவி வழங்கினாரா ரத்தன் டாடா?

விளையாட்டு

கடந்த அக்டோபர் 23 அன்று, பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற உலகக்கோப்பை ஆட்டத்தில், அபாரமாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ஆப்கான் வீரர் இப்ராஹிம் சத்ரான், தனது அணியின் இந்த வெற்றியை பாகிஸ்தானில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட ஆப்கான் அகதிகளுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் வெற்றி கொண்டாட்டத்தில், ஆப்கான் வீரர் ரஷீத் கானுடன் இணைந்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடனமாடினார். அந்த காணொளிகளும் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், இந்த போட்டியின் வெற்றிக்கு பிறகு, தனது வெற்றி கொண்டாட்டத்தின்போது, ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான், இந்திய தேசிய கொடியை தனது நெஞ்சில் ஏந்திக்கொண்டதாகவும், அதற்காக சர்வதேச கிரிக்கெட் வாரியம் அவருக்கு ரூ.55 லட்சம் அபராதம் விதித்ததாகவும், இந்த செய்தியை அறிந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, தனது அறக்கட்டளை மூலம் ரஷீத் கானுக்கு ரூ.10 கோடி நிதியுதவி அளித்ததாகவும் செய்தி தீயாய் பரவியது.

இந்நிலையில், இது குறித்து தனது X தளத்தில் ட்வீட் செய்துள்ள ரத்தன் டாடா, இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

ரத்தன் டாடா, தனது பதிவில், “நான் எந்த கிரிக்கெட் வீரருக்கும் நிதியுதவி செய்யவில்லை.

மேலும், வீரர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக ஐசிசி அல்லது எந்த கிரிக்கெட் அமைப்புக்கு, எந்த ஒரு பரிந்துரையையும் நான் வழங்கவில்லை.

இன்னும் சொல்லப்போனால், கிரிக்கெட்டிற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரையில், எந்த காரணம் கொண்டும் வாட்ஸ்ஆப்பில் ஃபார்வேர்டு செய்யும் தகவல்களை நம்பாதீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

முரளி

தொடங்கியது ஆப்பிள் Scary Fast நிகழ்ச்சி!

பிரதமர் தொடங்கி வைக்கும் இந்திய – வங்கதேச ரயில் சேவை!

தக்காளி விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி!

நிறுத்தப்பட்ட மும்பை டாக்ஸிகளும்… ஆனந்த் மகிந்திராவின் நினைவும்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *