இந்திய அணியில் இளம்வீரர் இஷான் கிஷன் இனி இடம்பெறுவது ரொம்பவே கடினம் என கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இடம்பெற்ற இஷான் கிஷனுக்கு டி2௦ தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இஷானுக்கு பதிலாக ஜிதேஷ் சர்மாவிற்கு வாய்ப்பு கிடைத்தது.
இதற்கிடையில் மனச்சோர்வு அடைந்ததாக கூறி சுற்றுப்பயணத்தின் பாதியிலேயே இஷான் நாடு திரும்பினார். என்றாலும் அவர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் சிகிச்சை எதுவும் எடுக்காமல், ஊர் சுற்றுவதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.
இது அப்போதே பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. இதற்கிடையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இஷானுக்கு டி2௦ உலகக்கோப்பையில் இடம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
விக்கெட் கீப்பர் ரோலுக்கு ரிஷப் பண்ட், இஷான் கிஷன் இருவருக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது என வெளிப்படையாகவே தெரிவித்தார். மேலும் ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி விவரம் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
அதற்கு முன்பாக இஷான் கிஷன் ரஞ்சி போன்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஆடி, தன்னை நிரூபிக்க வேண்டும் என ராகுல் டிராவிட் அறிவுரையும் கூறி இருந்தார்.
தற்போது இஷான் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா அவரின் சகோதரர் குருணால் பாண்டியா இருவருடனும் இணைந்து, ஐபிஎல் தொடருக்கான கிரிக்கெட் பயிற்சிகளை தொடங்கி இருக்கிறார்.
ஆனால் ரஞ்சி தொடரில் ஆட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு துளியும் இல்லை. தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்களை நிரூபிக்க ரஞ்சி தொடரில் உயிரைக்கொடுத்து ஆடி வருகின்றனர்.
இந்த வேளையில் இந்திய தேர்வுக்குழுவினரால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இஷான் கிஷன் ஓய்வில் இருந்து வருகிறார்.
அவர் ரஞ்சி தொடரில் ஆடினால் நான் தயாராக இருக்கிறேன் என இந்திய அணிக்கு உணர்த்த முடியும். இவை எல்லாம் தெரிந்தும் கூட இஷான் எதற்கும் தயாராக இல்லை.
ஒருவேளை ஐபிஎல் தொடரில் அவர் நன்றாக ஆடினாலும் கூட, யார் சொல்வதையும் கேட்காமல் அடம்பிடித்து வருகிறார்.
இதனால் தனது எதிர்காலத்தை தெரிந்தே அவர் மோசமாக்கி கொள்கிறார் என கிரிக்கெட் விமர்சகர்கள், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த காரணங்களால் ஜூன் மாதம் நடைபெறும் டி2௦ உலகக்கோப்பை தொடரிலும், அவர் இடம்பெறுவது கடினம் என கூறப்படுகிறது.
பயிற்சியாளர் யார் சொல்வதையும் கேட்காமல் அலட்சியம் செய்துவரும் இஷானுக்கு, இந்திய அணியின் கதவுகள் நிரந்தரமாக சாத்தப்படக்கூடிய அபாயங்கள் அதிகம் இருக்கின்றன.
தன் மீதான விமர்சனங்களுக்கு இஷான் என்ன செய்ய போகிறார்? என்பதை, நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எலக்ஷன் ஃப்ளாஷ் : காங்கிரஸ் கோட்டாவில் கமல்… பஞ்சாப் ஆளுநர் ஆகிறாரா பொன்னார்?
கிச்சன் கீர்த்தனா : இந்தியன் ஸ்டைல் பாஸ்தா