ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டம் நாளை மார்ச் 31 ஆம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் களமிறங்க உள்ளன.
நாளை தொடங்கும் இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானம் உள்ள அகமதாபாத் நகரில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.
எனவே நாளை நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டம் நடைபெறுமா இல்லையா என்ற குழப்பம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.1,031.32 கோடி!
மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நிலை: கே.என்.நேரு விளக்கம்!