மழையும் வலி கொடுக்குதே…புஸ்வானமான ரிஸ்வான் அண்ட் கோ

Published On:

| By Kumaresan M

நடப்பு சாம்பியன்ஸ் லீக் தொடரில் பாகிஸ்தான் அணி மிக மோசமான பல சாதனைகளை படைத்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் போட்டியை நடத்தும் நாடு வெளியேறியுள்ளது.

பாகிஸ்தான் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அடுத்து, இந்தியாவிடத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. Rain adds to Pakistan’s pain

இதையடுத்து, நேற்று வங்கதேச அணியுடன் ராவல்பிண்டியில் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி மோதியது. இந்த போட்டியில் ஆறுதல் வெற்றியாவது பெறலாம் என்கிற கனவுடன் பாகிஸ்தான் அணி இருந்தது. ஆனால், வருணபகவான் வேறு கணக்கு போட்டு விட்டான். போட்டி நடந்த ராவல்பிண்டியில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. இதையடுத்து, இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. Rain adds to Pakistan’s pain

இதனால், போட்டியை நடத்தும் நாடு என்ற வகையிலும் நடப்பு சாம்பியன் என்கிற வகையிலும் சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெற முடியாமல் பாகிஸ்தான் அணி இருந்து வெளியேறியது.

இது குறித்து பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் கூறுகையில், ‘நாங்கள் இந்த தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. இது மிகுந்த வருத்தமளிக்கிறது. ஒரு கேப்டனாக பொறுப்பை மறுக்க விரும்பவில்லை. தவறுகளில் இருந்து பாடம் கற்று கொண்டு மீண்டு வருவோம்’ என்று தெரிவித்துள்ளார். Rain adds to Pakistan’s pain

கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்கு பிறகு, பாகிஸ்தான் அணி ஐ.சி.சி. தொடரை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share