ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி வீரர் ரஹானே அரைசதம் விளாசினார். இவரின் அரைசதம் காரணமாக இந்திய அணி 260 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று(ஜூன் 9) நடைபெற்று வருகிறது.
இச்சூழலில், மூன்றாம் நாள் ஆட்டத்தில் பரத் 5 ரன்களில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுக்க ஷர்துல் தாக்கூர் – ரஹானே கூட்டணி சேர்ந்தது. ஷர்துல் தாக்கூர் தன்னுடைய ஆட்டத்தை நிதானமாக வெளிப்படுத்தினார். மறுபக்கம் ரஹானே தேவையான நேரத்தில் பவுண்டரியை விளாசி ரன்களை சேர்த்தார்.
சிறப்பாக ஆடிய ரஹானே அரைசதம்(89 ரன்கள்) அடித்து ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரஹானே அடித்த 26 வது அரைசதம் இதுவாகும்.
மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலிலும் இணைந்துள்ளார். தற்போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் வழக்கு: மீண்டும் ஒத்திவைப்பு!
“திருமாவின் வாழ்த்து ஊக்கத்தையும் எழுச்சியையும் தருகிறது” – வைகோ